Advertisment

’நீயே நீயே’ பாடல் வரி வீடியோ: அனுஷ்கா - மாதவனின் அட்டகாச மெலடி!

கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடல் மெல்லிசை ரகத்தில் அமைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nishabdham - neeye neeye lyric video

Nishabdham - neeye neeye lyric video

Nishabdham Lyric Video: நடிகை அனுஷ்கா ஷெட்டி, மாதவனுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் நிசப்தம். இதில் அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்பராஜு மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியிடப்படுகிறது.  இதன் ஆங்கில பதிப்பின் பெயர் சைலன்ஸ்.

Advertisment

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

நிசப்தம் / சைலன்ஸ் படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோனா பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து இந்தப் படத்தை பீப்பிள் மீடியா  தயாரிக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, "நீயே நீயே" என்ற சிங்கிளின் பாடல் வரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடல் மெல்லிசை ரகத்தில் அமைந்துள்ளது. கதாநாயகியின் அழகை வர்ணிக்கும் புதுவித சொற்களை பயன்படுத்தியிருக்கும், பாடலாசிரியர் கருணாவை நிச்சயம் பாராட்டலாம். அனுஷ்காவும், மாதவனும் இப்பாடலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

அனுஷ்காவின் தமிழ் அறிமுகமே மாதவனுடன் அவர் நடித்த ரெண்டு திரைப்படம் தான். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா’ என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அனுஷ்காவும், மாதவனும் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

Anushka Shetty Madhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment