Advertisment

நேர் கொண்ட பார்வை செட்டில் அஜித்துடன் குஷி கபூர்! - வைரலாகும் படம்!

நேர் கொண்ட பார்வை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
khushi kapoor with ajith kumar on nerkonda paarvai sets

Ner Konda Paarvai Set: நடிகர் அஜித் குமாருடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தப் படம், குஷியின் தந்தை போனி கபூர் தயாரிக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ செட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கண்ணில் கண்ணாடியுடன், வக்கீல் கோட் அணிந்திருக்கும் அஜித், குஷியுடன் பேசுகிறார். செட்டில் இருந்த யாரோ அவர்களுக்கு தெரியாமல் இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியினரின் இளைய மகளான குஷி படித்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு வயது 19. சினிமாவில் தனிப்பட்ட முறையில் அவர் இன்னும் பங்கெடுக்கவில்லை என்றாலும், குடும்பத்தினர் அத்தனை பேரும் சினிமாவில் இருக்கும் காரணத்தினால் குஷி கபூருக்கும் அந்த லைம்லைட் வெளிச்சம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேர் கொண்ட பார்வை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பாலிவுட் படமான பிங்க் ரீமேக் படமான இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த புதன் கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Ajith H Vinoth Boney Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment