பிரபு தேவா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!!!

நடிகர் பிரபு தேவாவை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நடிகை நிகேஷா படேல் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் என்ற செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Nikesha Patel

சமீபத்தில் தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த நடிகை நிகேஷா படேல், அந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடன் நடிப்பது மட்டும் ஆசை கிடையாது, அவரையே திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

பலரும் நிகேஷாவை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டதால் அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும் தான் பிரபு தேவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியதை பலரும் தவறாக எடுத்துக்கொண்டுள்ளனர் இதனால் இது போன்ற வதந்தி பரவி வருகிறது என விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் தெளிவுபடுத்தி உள்ளார். அதில், “பல ஊடகங்கள் பிரபு தேவா சார் பற்றி செய்தி குறித்து என்னைத் தொடர்பு கொள்கின்றனர். இது எனக்கு விரக்தியை அளிக்கிறது. நான் கூற வந்த விஷயத்தைத் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். நான் இப்போது வேலை மற்றும் குடும்பத்துடன் பிஸியாக உள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் பிரபு தேவாவை என்றும் ‘சார்’ என்றே அழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

×Close
×Close