பிரபுதேவா ஜோடியாகும் நிக்கி கல்ரானி, தன்யா ரவிச்சந்திரன்

பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ரானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடிக்க உள்ளனர்.

பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ரானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடிக்க உள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
charlie chaplin 2

பிரபுதேவா ஜோடியாக நிக்கி கல்ரானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடிக்க உள்ளனர்.

Advertisment

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சார்லி சாப்ளின்’. காமெடிப் படமான இதில், பிரபு, லிவிங்ஸ்டன், காயத்ரி ரகுராம், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் மாநில சிறப்புப் பரிசைப் பெற்றார் பிரபு.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 6 இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு. 1975ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்ற படத்தின் ரீமேக்தான் ‘சார்லி சாப்ளின்’ என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது. சக்தி சிதம்பரம் இயக்க, பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி, தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக இருக்கிறது.

Advertisment
Advertisements

தற்போது ‘யங் மங் சங்’, ‘குலேபகாவலி’ மற்றும் ‘மெர்குரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. அதைத் தொடர்ந்து ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ஷூட்டிங்கும் தொடங்க இருக்கிறது.

Tamil Cinema Prabhu Deva Nikki Galrani Tanya Ravichandran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: