scorecardresearch

விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘காளி’ படத்தைத் தொடர்ந்து ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. ‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேசா, இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், விஜய் ஆண்டனி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த ‘பார்ட்டி’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தற்போது எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

‘திமிரு பிடிச்சவன்’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nivetha pethuraj pair with vijay antony