‘இதுவரைக்கும் சண்டை இல்லை’ என ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தை, அவருடைய மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதி செய்கிறார்.
‘காளி’ படத்தின் படப்பிடிப்பு, இன்றோடு நிறைவு பெறுகிறது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, ‘இதுவரை எந்த சண்டையும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரின் இந்த ட்வீட்டுக்குப் பதில் அளித்துள்ள கிருத்திகா உதயநிதி, “ரிலீஸ் வரைக்கும் சண்டை இருக்காது என்று நம்புகிறேன். சண்டை எல்லாமே படத்தில் தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தெலுங்கில் ‘காசி’ என்ற பெயரில் ரிலீஸாகிறது.