Advertisment

“யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது” - விஷாலின் அறிவிப்புக்கு அபிராமி ராமநாதன் பதிலடி

“விஷால் கட்டளையிட்டிருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கவில்லையே தவிர, அம்மா குடிநீர் குடுத்தால் தியேட்டர்களில் விற்க தயாராகவே உள்ளோம்” என்கிறார் அபிராமி ராமநாதன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
abirami ramanathan, vishal, theater owners

Abirami Ramanathan at Mayavaram Movie Audio Launch

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும், தியேட்டர்களில் அம்மா குடிநீர் விற்க வேண்டும், மக்கள் குடிநீர் எடுத்துவர அனுமதிக்க வேண்டும், கேண்டீனில் எம்.ஆர்.பி. விலையில் மட்டுமே விற்க வேண்டும், ஆன்லைன் புக்கிங் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என 6 அதிரடி அறிவிப்புகளை நேற்று முன்தினம் நள்ளிரவில் அறிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால்.

Advertisment

மேற்கண்டவற்றைக் கடைப்பிடிக்காத தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைப்போம் என்றும் விஷால் தெரிவித்தார். மேலும், டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளதைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாகக் கொடுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தவர், அப்படி அதிகமாக வசூலித்தால் புகார் செய்யுங்கள் என்றும் கூறினார்.

விஷாலின் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, “எங்களுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. அவர் நினைத்திருந்தால் எங்களை அழைத்து ‘இப்படிப் பண்ணலாமே...’ என்று கூடிப்பேசி முடிவு செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு உத்தரவிடுவதைப் போல அவர் பேசியிருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது.

யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது. எல்லோரும் அண்ணன் - தம்பிங்க மாதிரி. நாங்க இல்லாம அவங்க இல்ல, அவங்க இல்லாம நாங்க இல்ல. எல்லா சங்கங்களையும் ஒன்றுகூட்டி, ‘மக்கள் இந்த மாதிரியெல்லாம் விரும்புறாங்க, நீன்ன என்ன சொல்றீங்க?’ என்று கேட்டிருந்தால் நியாயம்.

அப்படி இல்லாமல், ஒரு கமிட்டி அமைத்து உங்கள் மீது கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் என்றால், அவர்கள் மீது சொல்வதற்கு எங்களிடமும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும், அவர்களிடம் மீட்டிங் போட்டு பேசத்தான் ஆசைப்படுகிறோமே தவிர, தன்னிச்சையாக பிரஸ்ஸை அழைத்துப் பேச விரும்பவில்லை. பார்க்கிங் குறித்த வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் இருப்பதால், அதைப்பற்றிப் பேசமுடியாது” என்று தெரிவித்துள்ள அபிராமி ராமநாதன், விஷால் கட்டளையிட்டிருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கவில்லையே தவிர, அம்மா குடிநீர் குடுத்தால் தியேட்டர்களில் விற்க தயாராகவே உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

 

Tamil Cinema Abirami Ramanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment