விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்...

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், எந்த ‘கட்’டும் சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. பழங்குடி மக்களின் தலைவனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, மொத்தம் 8 கெட்டப்புகளில் தோன்றுகிறார். அதில், எமன் கெட்டப்பும் ஒன்று.

விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கெளதம் கார்த்திக், நிகாரிகா கோனிடேலா, காயத்ரி, விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், எந்த ‘கட்’டும் சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸாவதாக இருந்த இந்தப் படம், வருகிற 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், இறுதியாக பிப்ரவரி 2ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

×Close
×Close