விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம், 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக் நடித்துள்ளார். நிகாரிகா, காயத்ரி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
மேலும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை, தமிழகத்தில் கிளாப் போர்டு எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்தப் படத்தை வெளியிட இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.