OTT: பாக்ஸ் ஆபிசில் ரூ. 600 கோடி கலெக்ஷன்... ஓரம் கட்டிய ரூ. 300 வசூலித்த படம்; ஓ.டி.டி-யில்‌ வியூஸ் அள்ளிய டாப் படங்கள்!

பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்து ஓ.டி.டி தளத்தில் டாப் வியூஸ் பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்து ஓ.டி.டி தளத்தில் டாப் வியூஸ் பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
og

இன்றைய சூழ்நிலையில் மக்கள் படம் பார்ப்பதற்கு திரையரங்கை விட ஓ.டி.டி-யே அதிகம் தேர்வு செய்கின்றனர். ஒரு சிலருக்கு படம் பார்க்க பணம் இல்லை, சிலருக்கு நேரம் இல்லை இப்படி பல காரணங்களால் பெரும்பாலான ரசிகர்கள் ஓ.டி.டி-யை தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி-யில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஓ.டி.டி-யில் வியூஸ்களை குவித்த டாப் படங்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

Advertisment

இட்லி கடை

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் ஓ.டி.டி டாப் பட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ளது. வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், உலகளவில் 71 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. தியேட்டரில் ஹிட்டானதை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் ரிலீசானது. அந்த வகையில் இப்படம், கடந்த வாரம் சுமார் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

பரம சுந்தரி

சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'பரம சுந்தரி'. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் கடந்த வாரம் மட்டும் 28 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது.

தே கால் ஹிம் ஓஜி

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) தெலுங்கில் உருவான இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் 30 லட்சம் லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா சாப்டர் 1’. இப்படம்  அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாகி கடந்த வாரம் 35 லட்சம்  வியூஸ் பெற்றுள்ளது.

லோகா

கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்களின் பட்டியலில் மலையாளத்தில் வெளிவந்த 'லோகா சாப்டர் 1 சந்திரா' முதல் இடத்தை பிடித்துள்ளது. மலையாளத்தில் வெளியான முக்கிய நட்சத்திரங்களின் படங்களை காட்டிலும் இப்படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ரிலீசான இப்படம், கடந்த வாரம் 38 லட்சம் வியூஸ் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

OTT Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: