சர்வதேச திரைப்பட விழாவில் 4 முறை திரையிடப்பட்ட ‘பேரன்பு’

ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேரன்பு’, நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் நான்கு முறை திரையிடப்பட்டுள்ளது.

ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேரன்பு’, நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் நான்கு முறை திரையிடப்பட்டுள்ளது.

‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், ‘தங்க மீன்கள்’ சாதனா, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பி.எல்.தேனப்படன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இன்னும் திரைக்கு வராத ‘பேரன்பு’, நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் 47வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி ஒரு காட்சியும், 28ஆம் தேதி ஒரு காட்சியும், 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒரு சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டுள்ளது. இந்த மூன்று காட்சிகளுமே அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டிருக்கிறது. அத்துடன், இன்றும் ஒரு காட்சி திரையிடப்பட இருக்கிறது.

ராமின் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படமும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

×Close
×Close