பாக்கத் தானே போற இந்த காளியோட 'மரண மாஸ்' ஆட்டத்த... ‘பேட்ட’ ரஜினிகாந்தின் அரசியல்

petta song lyrics: "மரணம்.. மாஸு மரணம் ...tough தரணும்... அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்... "

Marana Mass Song, Rajinikanth’s Petta First Single::  ‘மரண மாஸ்’ இது தான் இப்போதைய ட்ரெண்டிங் வார்த்தை. இது Youtube ட்ரெண்டிங் லிஸ்டில் மட்டும் நம்பர் 1 இடத்தில் இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ‘பேட்ட’

‘2.0’ படத்தின் இமாலய வெற்றியின் தாக்கமே இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில், மற்றுமொரு ரஜினி படம் நம்மை கிறங்கடிக்க வருகிறது. பேட்ட படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். முதன் முறையாக தன் தலைவர் ரஜினியுடன் ஜோடி சேருகிறார். இந்த குழு நேற்று வெளியிட்ட ‘மரண மாஸ்’ பாடல் பக்கா குத்து பாடல். ரஜினியின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டுக்கும் திரை அரங்கில் விசில் பறக்கும், ரொம்ப நாட்களுக்கு பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட trademark ரஜினி பாடல்.

ரஜினி – ஜெயலலிதா அரசியல் அனல் பறந்த காலத்தில், 1995ம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் “கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அதில் இருக்கு….” என்று எழுதப்பட்ட பாடல் மறக்கமுடியுமா? அதே பாணியில், இப்பொது ரஜினி அரசியலுக்கு வர இருக்கும் இந்த நேரத்தில், ‘மரண மாஸ்’ பாடலின் வரிகளை உற்று நோக்கினால் ரஜினியின் அரசியல் காற்று வீசும்.

விவேக் எழுதியிருக்கும் ரஜினியின் இந்த இன்ட்ரோ பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி.பி பாடியுள்ளனர். பாக்க தானே போற… இந்த காளியோட ஆட்டத்த…. என்று தொடங்கும் இந்த பாடல் ரஜினியின் அரசியல் ஆட்டம் இனி தான் ஆரம்பம் என்று குறிக்கிறதா?

“மரணம்.. மாஸு மரணம் …tough தரணும்… அதுக்கு அவன் தான்
பொறந்து வரணும்… ”

ரஜினியின் ஒவ்வொரு செயலுக்கும் விமர்சனம் செய்து tough தரும் ரஜினியின் விமர்சகளுக்காகவே எழுதப்பட்ட வரி இது!

இதற்கு பின்னால் வரும் “எவண்டா மேல.. எவண்டா கீழ…எல்லா உயிரையும் ..ஒன்னாவே பாரு”  பாடல் வரி, தொடர்ந்து நடக்கும் சாதிய பிரச்னைகள்.. ஆணவ படுகொலைகளுக்கு எதிராக நறுக்கென்று ரஜினி தரும் பஞ்ச்.

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே ” என்று ஒவ்வொரு முறையும் ரஜினி கூறும்போது விசில் விண்ணை பிளக்கும் அதற்கு காரணம் ரஜினி தமிழக மக்களின் மீது வைத்துள்ள அன்பு என்பதை பிரதிபலிக்கும் விதமாக “முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு, தலையில் ஏத்தி வச்சு கொண்டாடும் ஊரு… என்ற வரிகளுடன் முடிகிறது பாடல்..

“நியாயம் இருந்தால் உன்னை மதிப்பேன், கால இழுத்து உயர நெனச்ச கெட்ட பையன் இடியா இடிப்பேன்… ” – அரசியல் கட்சிகளுக்கு இது ரஜினியின் எச்சரிக்கை!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close