சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் பாடலை எந்த பாடகர் பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் நாளை இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது.
இதற்கான போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் நடனமாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
பேட்ட படம் மரண மாஸ் பாடல் பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியன்
அதில் நாளை வெளியாக இருக்கும் மரண மாஸ் பாடலை யார் பாடியுள்ளார் தெரியுமா? என்று கேள்வியுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. ரசிகர்கள் பலரும் இதற்குபதில் அளித்து வந்தனர். எனினும் வெரும் கெஸ் கேள்வியாக மட்டுமே இருந்த இதற்கான பதிலும் தற்போது ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
December 2018
படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ள ட்விட்டர் பக்கத்தில், “நாளை வெளியாக இருக்கும் மரண மாஸ் பாடலை பாடகர் எஸ்.பி. பாலசுப்புரமணியம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளில், அனிருத் இசையமைப்பில் நாளை வெளியாகும் இந்த பாடலுக்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பாத்து காத்திருக்கின்றனர்.