பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் - சயிஃப் அலிகானின் ஒரு வயது செல்லக் குழந்தை தைமூர் அலி கான். சினிமா நட்சத்திரங்களின் குழந்தையாக இருந்தாலே, அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் ஊடகங்கள், தனிநபர்கள் அவர்களை புகைப்படங்கள் எடுப்பர். அப்படி, எடுக்கப்பட்ட தைமூரின் எல்லா புகைப்படங்களும் இணையத்தில் செம்ம வைரல்.
தற்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் அம்மாவுடன், பாட்டி பபிதாவை காண அவரது வீட்டுக்கு செல்லும்போது எடுக்கப்பட்ட தைமூரின் புகைப்படங்கள் க்யூட்டாக உள்ளன. வழக்கம்போல் கேஷூவல் உடையில் சாதாரணமாக இருந்தார் கரீனா கபூர். குட்டி தைமூர், ‘பவர்ஃபுல்’ என எழுதப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்திருந்தான்.
A post shared by kareenakapoor.Arabfans (@kareena_bebofc) on
A post shared by سيلا عمر (@sila_saifeena) on
kisssyyyy???????? #kareenakapoorkhan #taimuralikhan
A post shared by Kareena kapoor khan ???? (@kareena_kapoor_khan_begum) on
A post shared by Noga Eladl (@nogaeladl) on
புகைப்படங்கள் எடுக்கும்போது தைமூர் அலி கான் சில சமயங்களில் போஸ் கொடுப்பதுண்டு. அப்படி, சமீபத்தில் தன் பாட்டி பபிதாவுடன் ஜிம்முக்கு சென்று திரும்பும்போது, புகைப்படம் எடுத்தவர்களுக்கு நாக்கை நீட்டி கிண்டலடிக்கும் விதமாக போஸ் கொடுத்தான் தைமூர்.
இப்படி, தினந்தோறும் தைமூர் அலிகானை ஊடகங்கள் புகைப்படங்கள் எடுப்பதால், கரீனா கபூரின் தந்தையும் நடிகருமான ரன்தீர் கபூர், ஊடகங்களை சமீபத்தில் கடிந்துகொண்டார். ”காலையில் எழுந்தவுடன் தினமும் செய்தித்தாள்களில் என்னுடைய பேரனின் புகைப்படங்களையே காண்கிறேன்”, என அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.