/tamil-ie/media/media_files/uploads/2018/02/anasuya-bharadwaj-photo.jpg)
பிரபல தெலுங்கு நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனசூயா பரத்வாஜுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அனசூயா பரத்வாஜ். ‘நாகா’, ‘வின்னர்’ உள்பட சில தெலுங்குப் படங்களில் நடித்துள்ள அனசூயா, தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், ஏராளமான தொலைக்காட்சி மற்றும் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தன் அம்மா வீடு இருக்கும் தன்ரகா பகுதியில் இருந்து வெளியில் வந்துள்ளார் அனசூயா. அப்போது ஒரு சிறுவன் அனசூயாவிடம் செல்ஃபீ எடுக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த அனசூயா, அவரின் போனைப் பிடித்து கீழே போட்டு உடைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த அனசூயா, “இதுபற்றி என்னைக் குற்றம் சொல்லக்கூடாது. எங்களுக்கு பிரைவஸி தேவை” எனத் தெரிவித்துள்ளார். இதை நெட்டிசன்கள் ட்ரால் செய்ய, ட்விட்டரில் இருந்து வெளியேறி விட்டார் அனசூயா.
“அனசூயா செல்போனைப் பிடுங்கி உடைத்ததாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களை சேகரித்து, விசாரித்து வருகிறோம்” என உஸ்மானியா பல்கலைக்கழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.