விஜய் - பிரபுதேவா படத்தின் ஷூட்டிங் ஓவர் prabhu deva's lakshmi shoot wrapped | Indian Express Tamil

விஜய் – பிரபுதேவா படத்தின் ஷூட்டிங் ஓவர்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவந்த ‘லட்சுமி’ படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது.

விஜய் – பிரபுதேவா படத்தின் ஷூட்டிங் ஓவர்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவந்த ‘லட்சுமி’ படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்துள்ளது.

சாய் பல்லவி நடித்துள்ள முதல் தமிழ்ப்படமான ‘கரு’ படத்தை, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், அபார்ஷனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘லட்சுமி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார் ஏ.எல்.விஜய். ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். நடனத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்கும் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே விஜய் – பிரபுதேவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘தேவி’ படத்தின் பெயர் பெண்ணாக இருப்பதால், இந்தப் படத்துக்கும் பெண் பெயரையே தலைப்பாக வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன.

எனவே, விஜய் இயக்கத்தில் ‘கரு’ மற்றும் ‘லட்சுமி’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயார் நிலையில் இருக்கின்றன. இதில், ‘கரு’ படம் வருகிற 23ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Prabhu devas lakshmi shoot wrapped