தீபாவளி ரேஸில் பின்வாங்கிய எல்.ஐ.கே, சோலா ரிலீஸ் ஆகும் டூட்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது எல்.ஐ.கே திரைப்படம் தள்ளிப்போயுள்ளது. டூட் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.

தற்போது எல்.ஐ.கே திரைப்படம் தள்ளிப்போயுள்ளது. டூட் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.

author-image
D. Elayaraja
New Update
Dude and LIK

2025-ம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகியுள்ள டூட் திரைப்படமும், எல்.ஐ.கே திரைப்படமும் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த ரேஸில் இருந்து எல்.ஐ.கே விலகியுள்ளதாக அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில், இதுவரை 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரதீப் ரங்கராதன், இளைஞர்களின் விருப்ப நாயகனாக உருவெடுத்துள்ள நிலையில், அவரது நடிப்பில் தற்போது 2 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. டூட் மற்றும் எல்.ஐ.கே ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் இரண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது எல்.ஐ.கே திரைப்படம் தள்ளிப்போயுள்ளது. டூட் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.

கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கத்தில் தயாராகியுள்ள டூட் திரைப்படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ரோஹினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.

அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே.) இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு, மிஷ்கின், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் தற்போது தீபாவளி ரேஸில் இருந்து தள்ளிப்போயுள்ளது.

Advertisment
Advertisements

இது குறித்து தாயரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில்கொண்டு, 2 படங்களின் வசூலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்று நாஙகள் விரும்புகிறோம். எனவே அன்பின் அடையாளமாக எங்கள் படத்தை 2025 டிசம்பர் 18-ந் தேதி வியாழன் கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும்வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: