scorecardresearch

Pray For Nesamani: ஹர்பஜன் சிங்கையும் கலங்கடித்த ’காண்ட்ராக்டர் நேசமணி’!

Pray For Nesamani: ஒட்டு மொத்த நேசமணி ரசிகர்களும், அவருக்காக கொதித்தெழுந்தனர்.

Pray For Nesamani trending

Pray For Nesamani: நேற்றிலிருந்து இணையத்தைத் திறந்தாலே எல்லா சமூக வலைதளங்களிலும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ தான் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

யார் இந்த நேசமணி?

கடந்த 2001-ம் ஆண்டு, இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ‘ப்ரெண்ட்ஸ்’. ரொமாண்டிக் காமெடி களத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி, தேவயாணி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார்.

இதில் ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைகைப்புயல் வடிவேலு.

ஃப்ரெண்ட்ஸ் படம் என்றாலே ‘காண்ட்ராக்டர் நேசமணி’ முதலில் நினைவுக்கு வரும் அளவுக்கு ரசிகர்களுக்கு அத்தனை நெருக்கமாகியிருந்தது அந்த கதாபாத்திரம்.

இந்தப் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி பேசும் “அப்ரசண்டிகளா, வாய மூடுங்கடா அயோக்கிய ராஸ்கல்களா, ஓடுனா மட்டும் ஒன்னய விட்ருவோமா, நாசமா போன எடுபட்ட பயலுகளா, சல்லி சல்லியா நொருக்கிட்டீங்களேடா, நான் கூட புதுசுன்னு நெனச்சேங்க, வாய மூடுடா கொறங்கு, ஃபர்னிச்சார தொட்ட மொத டெட்பாடி நீ தான், என்ன ஃபீலிங்கா… எனக்குத் தாண்டா ஃபீலிங்கு, நீ புடுங்குறது பூராவே தேவையில்லாதது தான், ஆணியே புடுங்க வேணாம்” போன்ற வசனங்கள் தமிழ் ரசிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்ளை செய்துக் கொள்ளும் அளவுக்கு அத்தனை ஃபேமஸ்.

Pray For Nesamani

நேசமணி ட்ரெண்ட் ஆனது எப்படி?

முகநூலில் ‘சிவில் எஞ்ஜினியரிங் லேனர்ஸ்’ என்ற பக்கத்தில் சுத்தியலை பதிவிட்டு, உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதன் பெயர் சுத்தியல். எதன் மீதாவது அடிக்கும் போது ‘டங் டங்’ என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில், பெயிண்டிங் காண்ட்ராக்டர் மண்டையைப் பிளந்தது இதுதான். இதை அவரின் அண்ணன் மகனே செய்தார். பாவம்” என பதிலளித்திருந்தார்.

இதற்கு, “இப்போது அவர் நலமாக இருக்கிறாரா?” என அக்கறையுடன் கேட்டிருந்தார் வெங்கடேஷ் மாதமுத்து என்பவர்.

”அவர் இப்போது நலமாக இருக்கிறார். அவரது டீம் அவருக்கு தண்ணீர் தெளித்து உடனடியாக முதலுதவி செய்தது” என்ற விக்னேஷின் பதிலுக்கு, “நான் அவருக்காக பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். அவரை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்” என குறிப்பிட்டிருந்தார் வெங்கடேஷ்.

உடனே #Pray_For_Nesamani என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டார் விக்னேஷ். வெங்கடேஷும் அதை வழிமொழிய, உடனே இந்த போஸ்ட் முகநூலில் வைரலானது.

பின்னர் அது அப்படியே ட்விட்டருக்கும் பரவியது. அவ்வளவு தான் ஒட்டு மொத்த நேசமணி ரசிகர்களும், அவருக்காக கொதித்தெழுந்தனர்.

அவர் உடல்நிலையில் முன்னேற்றத்தைத் தெரிந்துக் கொள்வதற்காக, நேசமணி எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை தேடி அலைந்தனர்.

நேசமணியின் மீது கொண்ட நேசத்தால் கொஞ்ச நேரத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆனது #Pray_For_Nesamani ஹேஷ்டேக்.

குறிப்பாக தமிழ் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் பற்றும் பாசமும் கொண்ட, ஹர்பஜன் சிங் ட்விட்டரில், “மீண்டு வா நேசா” என அழைப்பு விடுத்திருக்கிறார்.

கூடவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் ட்விட்டர் தளத்திலும், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.

அதோடு, ஒரு நொடி கூட கண் அயராமல் இரவெல்லாம் கண் விழித்து நேசமணியின் மீது தாங்கள் கொண்டிருக்கும் பாசத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினார்கள் அவரது ரசிகர்கள்.

அதில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்…

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pray for nesamani contractor vadivelu trending on twitter