scorecardresearch

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானிசங்கர்

எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கிறார்.

priya bhavani shankar

எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கிறார்.

இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ மற்றும் வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் கொடூரமான வில்லத்தன நடிப்பை வழங்கியிருந்தார். அத்துடன், செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘இறவாக்காலம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.  ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை இயக்கிய பொட்டென்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானிசங்கர், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர், வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடிக்கிறார் பிரியா பவானிசங்கர். ஹீரோயினாக ‘வனமகன்’ சயிஷா நடிக்க, கார்த்தியின் மாமா பெண்ணாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Priya bhavani shankar pair with sj suryah