ஒரே ஃபிரேமில் 2 சூப்பர் ஸ்டார் மகள்கள்; ஒருவர் முன்னணி நடிகை, மற்றொருவர் அறிமுக நடிகை: யார்னு கண்டுபிடிங்க!

பிரபல இயக்குனரின் மகள், ஒருவர் சினிமாவில், வசூலில் வெற்றியை குவித்த படத்தில் நாயகி. மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகள். இவர் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். 

பிரபல இயக்குனரின் மகள், ஒருவர் சினிமாவில், வசூலில் வெற்றியை குவித்த படத்தில் நாயகி. மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகள். இவர் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். 

author-image
D. Elayaraja
New Update
Kalyani and Vismaya

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் அல்லது நடிகை வந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தில் இருந்து சகோதரை சகோதரிகள், மகள் அல்லது மகன் என அனைவருமே சினிமாவில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். இதில் அவர்கள் திறமையை பொறுத்தே, சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் பிரபல இயக்குனரின் மகள், ஒருவர் சினிமாவில், வசூலில் வெற்றியை குவித்த படத்தில் நாயகி. மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகள். இவர் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். 

Advertisment

இவர்கள் வேறு யாரும் இல்லை லோகா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா ஆகிய இருவரும் தான் இந்த போட்டோவில் இருக்கிறார்கள். கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே சில வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் நிலையில், விஸ்மயா தற்போது சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். 

மலையாளத்தில் வெளியான '2018' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் 'துடக்கம்' (Thudakkam) படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார். படத்தின் தயாரிப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், கொச்சியில் அக்டோபர் 30, வியாழக்கிழமை அன்று ஒரு பூஜை விழா நடைபெற்றது. மோகன்லால், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகனும் நடிகருமான பிரணவ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் விஸ்மயாவை உற்சாகப்படுத்தினர்.

விஸ்மயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தவர்களில், மோகன்லாலின் பால்ய நண்பரும், நீண்ட கால புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷனும் ஒருவர். அவர் சமூக வலைதளத்தில், விஸ்மயா தனது ‘Grains of Stardust’ என்ற புத்தகத்துடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, விஸ்மயா அவருக்குத் தனது மகள் கல்யாணி பிரியதர்ஷனைப் போன்றவர் என்று உருக்கமாகப் பதிவிட்டார்.

Advertisment
Advertisements

நான் இரண்டு குழந்தைகளை என் கைகளில் சுமந்தேன், ஒரு கையில் கல்யாணியையும், மற்றொன்றில் மாயாவையும். அப்படித்தான் நாங்கள் ஒரு குடும்பமாக வளர்ந்தோம். லால் இன்று குறிப்பிட்டது போல், அவர்கள் ஒரு நாள் திரைப்படங்களில் நடிப்பார்கள் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. கல்யாணிக்கு 'லோகா' (Lokah) இருந்தது போல, மாயாவின் 'துடக்கமும்' ஒரு அழகான ஆரம்பமாக இருக்கட்டும். கடவுள் மாயாவை ஆசீர்வதிக்கட்டும்," என்று பதிவிட்டுள்ளார்.

Vismaya-Mohanlal-Kalyani-Priyadarshan-thudakkam-2

இந்த பதிவு வைரலாக பரவிய நிலையில், தனது தந்தைக்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருப்பது இந்த கணம் வரை தனக்குத் தெரியாது என்று ஆச்சரியத்துடன் கூறியள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் அப்பாவுக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்கிறது என்று இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாது பதிவிட்டு, விஸ்மயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சிறுவயதில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்த அழகான மனிதரும் இன்று நடிகராக தனது பயணத்தைத் தொடங்குகிறார். உன்னால் முடியும் மயூ. நீ எப்போதும் எல்லாவற்றையும் சாதிப்பாய் என்று கூறியுள்ளார்.

'துடக்கம்' திரைப்படத்தின் பூஜையின் போது பேசிய மோகன்லால், தனது பிள்ளைகள் சினிமா உலகிற்குள் வருவார்கள் என்று தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Kalyani Priyadarshan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: