/tamil-ie/media/media_files/uploads/2023/08/priyankar-kaavalaa.jpg)
காவலா ஸ்டெப் போட்டுப் பழகிய விஜய் டி.வி பிரியங்கா; டிரெயினிங் கொடுத்த டி.ஜே பிளாக்: வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலயா நூவ் காவாலயா’ பாடலுக்கு விஜய் டிவியில் ஆங்கராக கலக்கி வரும் பிரியங்கா டான்ஸ் ஸ்டெப்ஸ் பழக டி.ஜே. பிளாக் டிரெயினிங் கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி திரையரங்குகளை ஹவுஸ் ஃபுல்லாக்கி வருகிறது. அதிலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலயா நூவ் காவாலயா’ பாடலுக்கு தமன்னாவின் டான்ஸ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் சினிமா, சின்னத்திரை பிரபலங்களில் ‘காவாலயா நூவ் காவாலயா’ பாடலுக்கு டான்ஸ் ஆடாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஜெயிலர் படத்தின் ஃபீவர் பரவி வருகிறது.
விஜய் டிவியில், சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் ஆங்கராக கலக்கி வரும் பிரியங்கா தனது தம்பி குடும்பத்துடன் பெங்களூரு சென்று அங்கே உடற்பயிற்சி செய்வதை ஜாலியாக ஒரு ஃபன் வீடியோ பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதில், ‘காவாலயா நூவ் காவாலயா’ பாடலுக்கு விஜய் டிவியின் டிஜே பிளாக் டிரெயினிங் கொடுக்க பிரியங்கா ‘காவாலா’ டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்டு பழகி இறுதியில், டான்ஸ் ஆட எனக்கு வராது என்று நகைச்சுவையாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.