/indian-express-tamil/media/media_files/2025/10/21/pradeep-ranga-2025-10-21-19-36-50.jpg)
தமிழ் சினிமாவில் 3 படங்களில் மட்டுமே நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், முதலில் இயக்குனராகத்தான் அறிமுகமானார். இவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இந்த சந்திப்பு எப்படி நடந்தது என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படம் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்திற்கு முன்னதாக, டிக்,டிக், டிக் அடங்கமறு ஆகிய படங்கள், சுமாரான வெற்றிப்படமாக அமைந்த நிலையில், கோமாளி படம் சூப்பர் ஹிட்டாக அமைந்து அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 12-ம் வகுப்பு படிக்கும்போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற ஒருவன் 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விழிக்கும்போது, மாறி இருக்கும் இந்த உலகத்துடன் தன்னை எப்படி ஒருங்கிணைத்துக்கொள்கிறார் என்பது குறித:து திரைக்கதை அமைக்கப்பட்ட கோமாளி திரைப்படம், ஜெயம்ரவியின் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.
இந்த படத்தை தயாரித்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ள ஐசரி கணேசன், என் மகள் படித்த கல்லூரியில் சீனியர் தான் பிரதீப் ரங்கநாதன். என் மகளை சந்தித்து உங்க அப்பாவிடம் ஒரு அப்பாயிமெண்ட் வாங்கி கொடுங்க என்று சொல்ல, என் மகள் என்னிடம் வந்து என் கல்லுரி சீனியர் அப்பாயிமெண்ட் கேட்கிறார் கொடுங்கள் என்று சொன்னார். நானும் கொடுத்தேன். அப்போது என்னை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுதான் என் முதல் படம், நான் யாரிடமும் வேலை செய்யவில்லை என்று சொன்னார்.
ஐசரி கணேஷ் : என் பொண்ணு படிச்ச காலேஜ் சினியர் @pradeeponelife அவர் என் பொண்ணு மூலமாக என்கிட்ட appointment கேட்டார் பார்த்தேன் உடனே கதை சொன்னார் அந்த படம் தான் #கோமாளி
— Joe Selva (@joe_selva1) October 21, 2025
ஒரே நாளில் அந்த appointment பீரதீப் ப்ரோ வாழ்க்கையே மாறிடுச்சு ......pic.twitter.com/gTcnPYt8Lt
இந்த கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது, ஜெயம் ரவி பெயரை பிரதீப் சொன்னார். அப்போது ஜெயம்ரவி கால்ஷீட் என்னிடம் இருந்தது. அவரை கதை கேட்க சொன்னேன். அவரும் கதை கேட்டுவிட்டு உடனே ஷூட்டிங் போகலாம் என்று சொன்னார். அப்படித்தான் கோமாளி திரைப்படம் உருவானது. இந்த படம் 100 நாட்களை கடந்து ஓடியது என்று ஐசரி கணேசன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us