/tamil-ie/media/media_files/uploads/2017/11/karan-johar.jpg)
பாலிவுட் நடிகர்களின் வாரிசுகளை அடுத்தடுத்து களமிறக்கி வருகிறார் தயாரிப்பாளர் கரண் ஜோஹர்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், ஆடை வடிவமைப்பாளர், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல முகங்கள் கொண்டவர் கரண் ஜோஹர். பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக அறிமுகமாகும் ‘தடக்’ படத்தை, கரண் ஜோஹர் தான் தயாரிக்கிறார். எத்தனையோ தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் ஓகே சொல்லாத ஸ்ரீதேவி, கரண் ஜோஹரிடம் மட்டும் மறுக்க முடியாமல் சம்மதம் தெரிவித்திவிட்டார்.
‘தடக்’ படத்தின் ஹீரோவாக, இஷான் கட்டார் அறிமுகமாகிறார். இவர், பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர். மராத்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாய்ரத்’ படத்தைத்தான், ‘தடக்’ என ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர்.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டேவையும் ஹீரோயினாக களமிறக்குகிறார் கரண் ஜோஹர். ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப் ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கத்தான் ஜான்வி கபூர் பேசப்பட்டு, பின்னர் ‘தடக்’ படத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.