நடிகராக மாறிய விஜய் சேதுபதி படத்தின் தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சஷிகாந்த், சி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம்’ மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ மூலம் படங்களைத் தயாரித்துவரும் அவர், ‘வ’, ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது ‘தமிழ்ப்படம் 2.0’ படத்தைத் தயாரித்து வருகிறார் சஷிகாந்த். ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில், தயாரிப்பாளர் சஷிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்த இயக்குநர் சி.எஸ்.அமுதன், “இந்த தலைமுறை நடிகர்களில் மிக முக்கியமானவர் சஷிகாந்த் என்பதை அவர் நடிப்பில் இருந்து தெரிந்து கொண்டேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

×Close
×Close