ஜெ.தீபா கோரிக்கை நிராகரிப்பு: குயின் வெப் தொடருக்கு தடை இல்லை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  குயின் வெப் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை  என்று சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்தது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்த ‘குயின்’ வலைத்தொடருக்கு, ரேஷ்மா கட்டாலா  கதை எழுதியிருந்தார்.  ’குயின்’ சீரியல் OTT தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.  இந்நிலையில்,  குயின்’ சீரியலை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா […]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  குயின் வெப் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை  என்று சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்தது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்த ‘குயின்’ வலைத்தொடருக்கு, ரேஷ்மா கட்டாலா  கதை எழுதியிருந்தார்.  ’குயின்’ சீரியல் OTT தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.


இந்நிலையில்,  குயின்’ சீரியலை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  குயின் வெப் தொடரை ஒளிபரப்ப தடை இல்லை என்றும், வழக்கை செப்டம்பர் மாதம்  28-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’தலைவி’ எனும் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குயின்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகவிருப்பதாக  சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Queen web series chennai high court judgement jeya deepa

Next Story
புதுசு புதுசா வர்றாங்க: பிக் பாஸ் தமிழ் லேட்டஸ்ட் அப்டேட்biggboss, biggboss tamil 4, kamalhaasan, vijay television, promo, contestants, shivani narayanan, tiktok ilakkiya, vj chitra, poonam bajwa, shilpa manjinath, ramya pandian, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com