கண்ணே நயன்... நீதான் என் குயின்: நயன்தாராவுக்கு ராகுல் தாத்தா காதல் கடிதம்

கண்ணே நயன்... நீதான் என் குயின்...உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்...காதுமா...என் Face ஆயிடுச்சு Shine...நீதான் என் ஹீரோயின்...

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அவருடன் நடித்துள்ள ராகுல் தாத்தா, காதல் சொட்ட சொட்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த காதல் கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப் படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, கடந்த 2005-ஆம் ஆண்டில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப் படத்துறைக்கு அறிமுகமானார். சில சறுக்கல்களை கண்டாலும், இவரது திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. குடும்பக் கதை, சென்டிமெண்ட் கதை, த்ரில், காதல் என எந்தவிதமான ரோல் என்றாலும் நயன்தாராவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

அழகுப் புயலான இவரின் மவுசும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு இருக்கிற மாஸ், வேறெந்த ஹீரோயின்களுக்கும் இல்லை. “லேடி சூப்பர் ஸ்டார்” என ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், நயன்தாராவுக்கு அவருடன் நடித்துள்ள ராகுல் தாத்தா, காதல் சொட்ட சொட்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நானும் ரவுடி தான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரூப்பில் இருக்கும் ஒருவராக நடித்தவர் ராகுல் தாத்தா. அந்தப் படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த அவர், நயன்தாரா மீதான தனது காதலை கடிதத்தில் கொட்டியுள்ளார்.

நயன்தாராவுக்கு ராகுல் தாத்தா எழுதியுள்ள காதல் கடிதம்:

கண்ணே நயன்… நீதான் என் குயின்…

நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்…

I Know நீ ஒரு lady lion…

ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain…

உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்…

அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்…

காதுமா…என் Face ஆயிடுச்சு Shine…நீதான் என் ஹீரோயின்…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close