“பிக் பாஸ் ஜோடியின் கெமிஸ்ட்ரி அற்புதம்” : இயக்குநர் பாராட்டு

‘பிக் பாஸ் ஜோடிகளான ஹரீஷ் கல்யாண் - ரைஸா இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதம்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் இளன்.

‘பிக் பாஸ் ஜோடிகளான ஹரீஷ் கல்யாண்ரைஸா இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதம்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் இளன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. தமிழில் முதன்முதலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆரவ், சினேகன், ஓவியா, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி, ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி, கஞ்சா கருப்பு, நமிதா, ரைஸா, பரணி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், காஜல், சுஜா வருணி, அனுயா, ஸ்ரீ என 19 பேர் கலந்து கொண்டனர்.

இதில், ஹரிஷ் கல்யாண் – ரைஸா இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கின்றனர். அந்தப் படத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்  படத்தை, இளன் என்பவர் இயக்குகிறார். கிருஷ்ணா, சந்திரன் நடித்த ‘கிரகணம்’ படத்தை இவர் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக இளைஞர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் 70 சதவீத காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இளன் தெரிவித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ஹரீஷ் மற்றும் ரைஸா இருவரும் சிறந்த நடிகர்கள் என்றும், அவர்களுடன் பணியாற்றுவது ஜாலியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ள இளன், இருவரின் கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். வருகின்ற காதலர் தினத்தன்று படத்தின் ஆல்பம் அல்லது ஒரு பாடல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close