புகை, மது… எதை தேர்வு செய்கிறார் ஆல்யா மானசா?

நடிகை ஆல்யா மானசா, ஒரு வித்தியாசமான விளையாட்டு வீடியோவில் புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது இரண்டில் எதை தேர்வு செய்கிறார் என்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

raja rani 2 serial, raja rani 2 actress alya manasa, alya manasa, ராஜா ராணி 2, ஆல்யா மானசா, ஆல்யா மனசா வீடியோ, புகையா மதுவா, வைரல் வீடியோ, alya manasa which choose wine or smoke video, alya manasa instagram, alya manasa reel video, alya manasa

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆல்யா மானசா, ஒரு வித்தியாசமான விளையாட்டு வீடியோவில் புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது இரண்டில் எதை தேர்வு செய்கிறார் என்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆல்யா மானசா எதை தேர்வு செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் சீசன் 1ல் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ஆல்யா மானசா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். முதலில் சுமாராக போய்க்கொண்டிருந்த இந்த சீரியல் இப்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை ஈர்த்து நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

சின்னத்திரையில் ஆல்யா மானசாவுக்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த சூழலில்தான், ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் தன்னுடன் வேலைக்காரி வேடத்தில் நடிக்கும் நவ்யா சுஜியுடன் இணைந்து ஒரு ஜாலியான விளையாட்டு டான்ஸ் ரீல் வீடியோ செய்துள்ளார். அந்த வீடியோவில், ஆல்யா மானசாவும் நவ்யா சுஜியும் பல விஷயங்களில் இரண்டு சாய்ஸ்களில் ஒன்றை தேர்வு செய்கிறார்கள்.

முதலில் டோனேட் ஜீன்ஸ் அல்லது வேஷ்டி சட்டை இரண்டில் எது என்று வரும்போது ஆல்யா மானசா டோனெட் ஜீன்ஸ் என்று தேர்வு செய்து செல்கிறார். அடுத்து கேர்ல் பெஸ்ட்டி அல்லது பாய் பெஸ்ட்டியா என்று வரும்போது பாய் பெஸ்ட்டி என்று தேர்வு செய்து செல்கிறார். இதையடுத்து, உணவா (ஃபூட்) அல்லது பாய்ஸ்ஸா என்று வரும்போது ஆல்யாவும் சுஜியும் உணவை தேர்வு செய்து செல்கிறார்கள். அடுத்து வளையலா அல்லது வாட்ச்சா என்று வரும்போது ஆல்யா வளையல்களைத் தேர்வு செய்து செல்கிறார். அடுத்து, மதுவா (ஒயின்) அல்லது புகைபிடிப்பதா (ஸ்மோக்) என்று வரும்போது ஆல்யா மானசா மதுவைத் தேர்வு செய்து செல்கிறார். அடுத்து, ஹிந்தியா அல்லது தமிழ்மொழியா என்று வரும்போது ஆல்யா மானசா தமிழ்மொழியை தேர்வு செய்து சந்தோஷமாக செல்கிறார்.

ஆல்யா மானசாவும் நவ்யா சுஜியும் சேர்ந்து அதுவா இதுவா என்று தேர்வு செய்யும் விளையாட்டில் புகையா அல்லது மதுவா என்று வரும்போது மதுவை தேர்வு செய்வதை பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர். அதே போல, ஹிந்தியா அல்லது தமிழா என்று வரும்போது தமிழை தேர்வு செய்வதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா ஹீரோயினாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சந்தியா, மாமியார் வீட்டில் படாத பாடுபடுகிறார். மாமியாரின் கொடுமைகளை அனுபவிக்கிறார். இந்த சூழலில்தான், ஆல்யா மானசா, ஐபிஎஸ் போலீஸ் உடையை அணிந்து கொண்டிருக்கிற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். என்னுடைய இந்த லுக்கை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று ஆல்யா மானசா தெரிவித்துள்ளார். இதன் மூலம், ராஜா ராணி 2 சீரியலில் ஐஏஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா விரைவில் ஐபிஎஸ் ஆகிறார் என்பது தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Raja rani 2 serial actress alya manasa which choose wine or smoke video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express