Advertisment

அடேங்கப்பா... இவ்வளவு சீக்கிரமா எல்லா உண்மையையும் சந்தியா எப்படி கண்டுப்பிடிச்சாங்க?

கிட்டத்தட்ட எல்லா சீன்களும் அப்படியே பொருந்துகிறது.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
raja rani 2 serial raja rani vijay tv

raja rani 2 serial raja rani vijay tv

raja rani 2 serial raja rani vijay tv : நடிகர் சஞ்சீவ் நடிகை ஆல்யா மானசா ஜோடியாக நடித்த ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஜோடிய நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ராஜா ராணி சீரியல் கடந்த ஆண்டு நிறைவைடந்தது.

Advertisment

திருமணம் செய்துகொண்ட சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடிக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் அந்த சீரியலின் 2வது பாகம் தொடங்கப்பட்டது.திருமணம், பிரசவம் முடிந்த பிறகு, ஆல்யா மானசா ராஜா ராணி சீரியல் 2வது பாகத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார்.

ஆல்யாவுக்கு ஜோடியாக ‘திருமணம்’ சீரியலில் நடித்த சித்து நடித்து வருகிறார். இந்த சீரியல் முதலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஆல்யா மானசாவுக்காக அந்த சீரியல் பேசப்பட்டு வந்தது.

தற்போது இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜா ராணி 2 சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில், மாமியார் வீட்டில் மருமகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து கதை எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான என் கணவன் என தோழன் என்கிற சீரியலின் தழுவல் தான் ராஜா ராணி 2 என்ற பேச்சும் அடிப்படாமல் இல்லை. கிட்டத்தட்ட எல்லா சீன்களும் அப்படியே பொருந்துகிறது.

இப்போது மீனாவும், ராஜாவும் சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறை சந்தியா கண்டுப்பிடித்து விட்டார். ஜவுளிக்கடை குடோன் எரிந்து விட்டதாக அவர்கள் நாடகமாடியது சந்தியாவுக்கு தெரிந்து விட்டது. அப்ப இன்னிக்கு கண்டிப்பா சம்பவம் இருக்கு போல

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment