தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். ஐடி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தும் கூட, சில ரசிகர்கள் தங்கள் குழந்தைகளையும் தங்களுக்கு பிடித்தமான 'தலைவனை' பார்க்க அழைத்து வந்திருந்தனர். சூப்பர்ஸ்டாராலும் இந்த அன்பை தவிர்க்க முடியவில்லை.