12-12-1950 டைட்டில் மோஷன் போஸ்டர்!

'ரஜினிக்கு இப்படம் சமர்ப்பணம், அவரின் வெறித்தனமான ரசிகர்களிடமிருந்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலே தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேதியை கொஞ்சம் எளிதாகவே நாம் கெஸ் செய்துவிடலாம். யெஸ்! பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி ‘420’ , ‘இங்கிலீஷ் தெரியாதவன்’ என்று அடையாளப்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் தான்.

கபாலி செல்வா என்பவரது இயக்கத்தில் ரமேஷ் திலக், ஆதவன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடிக்கும் படத்தின் தலைப்பு 12-12-1950 என்று வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில், 12-12-1950 டைட்டில் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், ‘ரஜினிக்கு இப்படம் சமர்ப்பணம், அவரின் வெறித்தனமான ரசிகர்களிடமிருந்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்யா -சூர்யா என்பவர்கள் இசையமைக்க கோட்டேஸ்வர ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் கபாலி செல்வாவும் இப்படத்தில் நடிக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close