நடிகர் ரஜினிகாந்த், தன் ரசிகர்களை இரண்டாம் கட்டமாக இன்று முதல் 6 நாட்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்தார். இந்த நிகழ்வில் இயக்குநர்கள் கலைஞானம், மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “அரசியல் எனக்கு புதிது அல்ல. அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்கிறேன். அரசியலின் ஆழம் தெரியும். அரசியல் நிலைப்பாடு குறித்து 31ஆம் தேதி அறிவிப்பேன். அரசியலுக்கு வர வீரம் போதாது. வியூகமும் வேண்டும். எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களைவிட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளன” என கூறினார்.