Advertisment

சூப்பர் ஸ்டாருடன் நான்காவது முறையாக இணையும் ஹீரோயின் இவர் தான்!

இதன் படபிடிப்பு வரும் ஏப்ரல் 10-ம் தேதி துவங்கவிருக்கிறதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth AR Murugadoss Film

Rajinikanth AR Murugadoss Film

Thalaivar 167 Updates: நடிகர் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Advertisment

ஸ்டைலுக்கு பெயர் போன ரஜினி, இந்தப் படத்தில் இன்னும் கூடுதல் ஸ்டைலுடன் மாஸாக திரையில் தோன்றியிருந்தார். வெறித்தனமான ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் வெயிட்டான பொங்கல் விருந்தைப் படைத்தது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்குவதாக சொல்லப்பட்டது. ”அவரிடம் ஒரு கதையைக் கூறியிருக்கிறேன்” என இதனை சர்கார் பட வெளியீட்டு நேரத்தில், முருகதாஸும் உறுதிப்படுத்தினார்.

ரஜினியின் 167-வது திரைப்படமாக உருவாகவிருக்கும், இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக செய்திகள் வெளியாகின. இதில் ரஜினியுடன் யார் ஹீரோயினாக நடிப்பார்கள் என்ற கேள்வி, ரஜினி ரசிகர்களை துளைத்தெடுத்தது.

இந்நிலையில் தலைவர் 167 படத்தில், நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

nayanthara

சந்திரமுகி, குசேலன், சிவாஜி (ஒரு பாடலுக்கு மட்டும்) வரிசையில் ரஜினி - நயன்தாரா இணையும்  நான்காவது படம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

தவிர, இதன் படபிடிப்பு வரும் ஏப்ரல் 10-ம் தேதி துவங்கவிருக்கிறதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Cinema Rajini Kanth Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment