Advertisment

இது ரஜினிகாந்த் ஸ்பெஷல்... தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டாருக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் இரவு பகல் கண் விழித்து எழுதினர்,

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Birthday Special

Rajinikanth Birthday Special

ஸ்டைல் என்றால் ரஜினிகாந்த என்பார்கள். ஆனால் உண்மையில் பஞ்ச் வசனங்கள் என்றாலும் அதற்கு பிள்ளையார் சுழி சூப்பர் ஸ்டார் தான். ரஜினி இதுவரை நடித்த படங்களில் சண்டை, ரொமான்ஸ், பாடல் இல்லாத படங்கள் கூட உண்டு. ஆனால் பஞ்ச் வசனங்கள் இல்லாத படங்களே இல்லை.

Advertisment

தமிழ் சினிமாவில் பஞ்ச டையலாக் என்ற கோலத்திற்கு தொடக்கபுள்ளி வைத்தவரே ரஜினி தான். '16 வயதினிலே' படத்திலேயே 'இது எப்படி இருக்கு' என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம் சிவாஜி' படத்தில் இடம்பெற்ற "சும்மா அதிருதுல்ல' வரை தொடர்ந்து தற்போது 2.0 சிட்டி ரோபோவே பஞ்ச் அடிக்கும் வரை பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வரப்போகும் பேட்ட-யிலும் கட்டாயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கு மட்டும் ரஜினி பஞ்ச் பேசியதில்லை அவர் பேசும் சாதாரண வசனங்களில் கூட பஞ்ச் இருக்கும் என்பது அவரின் ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.

சூப்பர் ஸ்டாரின் இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய புகழ் பெற்ற சில பஞ்ச் வசனங்களை மீண்டும் ஒரு முறை அலசுவோமா? Rajinikanth Birthday Today, Most Famous Dialogues of the Superstar:.

1. முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற 'கெட்ட பையன் சார் இந்த காளி'

2. முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற பஞ்ச் 'சீவிடுவேன் சீவி'

3. மூன்று முகம்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை உச்சரிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு புகழ்பெற்ற பஞ்ச் வசனம் இது. 'தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்பிடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்'.

4. நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன்' குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற இந்த பஞ்ச் ரஜியின் ஆல் டைம் வேவரெட் என்றால் நம்ப முடிகிறதா?

5. 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம்தான், அனேகமாக ரஜினி பேசிய பஞ்ச் வசனங்களிலேயே பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வசனம் இது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பலர் இந்த வசனத்தை உபயோகித்தனர். நான் ஒரு தடவை சொன்னா....நூறு தடவை சொன்ன மாதிரி

6. நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு...?' - உழைப்பாளி படத்தில் வந்த மற்றொரு அசத்தல் அரசியல் பஞ்ச்.

7. படையப்பா படத்தில் இடம்பெற்ற வேற லெவல் பஞ்ச் 'என் வழி தனி வழி'

8. 'கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு' - பாபா

9. ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்' - இது அருணாச்சலம் படத்தின் ஹைலைட்டான பஞ்ச்.

10. சிவாஜி படத்தில் இடம்பெற்ற சும்மா அதிருதுல்ல..பஞ்ச் வசனங்களில் மீது நம்பிக்கை இல்லாத பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ரஜினிக்காக வைத்த வசனம்தான் இது.

தற்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் முதல் அறிமுகமாகும் கதாநாயகர்கள் வரை எத்தனை நடிகர்கள் பஞ்ச் வசனங்களை பேசினாலும், அந்த வசனங்கள் ரஜினியின் பஞ்ச் வசனங்களோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாமல் போய்விடும்.

மேலே சொல்லப்பட்ட அனைத்து வசனங்களும் படத்தின் காட்சிகளுக்காகவும் அல்லது ரஜினியின் ரசிகர்களுக்காகவும் சொல்லப்பட்டவை. இதை சூப்பர் ஸ்டாருக்காக எத்தனையோ ஜாம்புவான்கள் இரவு பகல் கண் விழித்து எழுதியது.

ஆனால், முதன்முறையாக ரஜினி தனக்கு தானே எழுதிய பஞ்ச் “ நான் யானை இல்லை. குதிரை, விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சிருவேன்' என்பதுதான். 'பாபா' படத்தின் தோல்வியை பஞ்சிலே விளக்கினார் சூப்பர் ஸ்டார். சொன்னதை செய்தது போலவே அடுத்து வந்த சந்திரமுகி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Rajinikanth Super Star
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment