Advertisment

Darbar Motion Poster Release: ரஜினியின் மாஸான லுக்கில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Rajinikanth Starrer Darbar Poster Latest Updates: தமிழ், தெலுங்கு தர்பார் போஸ்டர்களை கமல்ஹாசனும், மகேஷ் பாபுவும் வெளியிடுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar Movie Review Live, Darbar Movie Release Live

Rajinikanth Birthday Wishes, Happy Birthday Rajinikanth

 Darbar Movie Poster Release: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. படத்தில் மாஸாக காட்சியளித்து, தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக தனது 167-வது திரைப்படமான ’தர்பார்’ படத்தில் ஒப்பந்தமானார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கி வருகிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே முதன் முறையாக ரஜினியும் – முருகதாஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ரஜினியின் 2.0 திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், தர்பாரை தயாரிக்கிறது.

Advertisment

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு தர்பார் போஸ்டர்களை கமல்ஹாசனும், மகேஷ் பாபுவும் வெளியிடுகிறார்கள். இந்தி தர்பார் போஸ்டரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட, மலையாள தர்பார் போஸ்டரை மோகன்லால் வெளியிடுகிறார். இதனால் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

 

Live Blog

 Rajinikanth's Darbar Movie Poster Release 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.  



























Highlights

    18:29 (IST)07 Nov 2019

    தேங்க் யூ அனிருத்

    வெறித்தனமான மியூஸிக் போட்ட, அனிருத்துக்கு நன்றி 

    18:22 (IST)07 Nov 2019

    வெறித்தன வெயிட்டிங்

    ஆதித்யா அருணாச்சலத்தை திரையில் காண, வெறித்தனமாக வெயிட் செய்வதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். 

    18:13 (IST)07 Nov 2019

    சல்மான் கான் ட்வீட்

    ரஜினி வெறும் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என நடிகர் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார். 

    18:08 (IST)07 Nov 2019

    கண் கொள்ளா காட்சி

    ஒவ்வொரு ஃபிரேமும் கண் கொள்ளா காட்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 

    18:05 (IST)07 Nov 2019

    தலைவர் இஸ் பேக்

    தர்பார் படத்தில் நடிப்பது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். 

    18:03 (IST)07 Nov 2019

    ரஜினிக்கு கமல் ரசிகர்கள் வாழ்த்து

    தர்பார் போஸ்டர் வெளியீட்டை முன்னிட்டு, ரஜினிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் கமல் ரசிகர்கள்!

    18:00 (IST)07 Nov 2019

    சதீஷ் ட்வீட்

    இந்த பொங்கல் மாஸாக இருக்கும் என நடிகர் சதீஷ் ட்வீட்டியுள்ளார். 

    17:56 (IST)07 Nov 2019

    வயது வெறும் நம்பர் தான்

    வயது என்பது வெறும் நம்பர் தான் என்பது ரஜினியை பார்த்தால் தெரிகிறது என இவர் கூறியுள்ளார். 

    17:53 (IST)07 Nov 2019

    ரஜினி - கமலை திரையில் காண வேண்டும்

    மீண்டும் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க வேண்டுமென ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். 

    17:46 (IST)07 Nov 2019

    நன்றி கமல் சார்...

    கமல் ஹாசனுக்கு தங்களது நன்றியையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் ரஜினி ரசிகர்கள். 

    17:42 (IST)07 Nov 2019

    கமலுக்கு நன்றி தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்.

    தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமலுக்கு ரஜினி ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள். 

    17:34 (IST)07 Nov 2019

    தர்பார் தமிழ் போஸ்டர்

    நண்பர் ரஜினிகாந்தின் தர்பார் போஸ்டர் எனக் குறிப்பிட்டு, தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

    17:32 (IST)07 Nov 2019

    வெளியானது தர்பார் மோஷன் போஸ்டர்!

    தர்பார் தெலுங்கு போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மகேஷ் பாபு

    17:24 (IST)07 Nov 2019

    ரஜினி - கமல் நட்பு

    தமிழ் திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு உச்ச நட்சத்திரமாக விளங்குவது ரஜினியும், கமலும்.  இன்று நடிகர் கமல் ஹாசன் தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் தர்பார் பட மோஷன் போஸ்டரும் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவிருக்கிறது. இதனை ரஜினியின் நெருங்கிய நண்பரும், ’பர்த்டே பாயுமான’ கமல் வெளியிடுகிறார். 

    17:15 (IST)07 Nov 2019

    டிக்.. டிக்.. டிக்.. இன்னும் சில நிமிடத்தில் தர்பார் மோஷன் போஸ்டர்

    இன்னும் சில நிமிடங்களில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியாவதால், மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள் 

    17:10 (IST)07 Nov 2019

    தெலுங்கு போஸ்டரை வெளியிடும் மகேஷ் பாபு

    தர்பார் மோஷன் போஸ்டரை தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. 

    16:57 (IST)07 Nov 2019

    மோஷன் போஸ்டரை வெளியிடுபவர்கள்

    தர்பார் மோஷன் போஸ்டர் வெளியிடுபவர்களின் விபரத்தை நேற்றே ட்விட்டரில் அறிவித்திருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அதில் தெலுங்கில் வெளியிடுவது யார் எனக் குறிப்பிடவில்லை

    16:45 (IST)07 Nov 2019

    லைகா ட்வீட்

    தர்பார் மோஷன் போஸ்டர் வெளியாக இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கிறது என லைகா நிறுவனம் ட்வீட்டியுள்ளது. 

    16:32 (IST)07 Nov 2019

    ரஜினி ரசிகர்களே ரெடியா?

    பொங்கலுக்கு வெளியாகும் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்னும் 1 மணி நேரத்தில் வெளியாகவிருக்கிறது. முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகும் போது ரசிகர்கள் மகிழ்வார்கள். ஆனால் இந்த ஆன்லைன் உலகத்தில், இப்போதெல்லாம் ரஜினியை பற்றி எந்த செய்தி வெளியானாலும், திகட்ட திகட்ட கொண்டாடி மகிழ்கிறார்கள் அவரது ரசிகர்கள். அந்த கொண்டாட்டம் இன்று சற்று அதிகமாகவே இருக்கும் என நம்புகிறோம்.

     Rajinikanth's Darbar Movie Poster Release: தர்பார் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன. அதோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பப்பர், சுனில் ஷெட்டி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தர்பார் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    Ar Murugadoss Rajinikanth
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment