Advertisment

ரூ.1.23 கோடி விலை, ப்ளூ கலர்: கலாநிதி கொடுத்த BMW காரில் இத்தனை அம்சங்களா?

ஜெயிலர் படத்தில் ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
Sep 02, 2023 00:17 IST
New Update
Rajinikanth Gets BMW X7 Worth Rs 1 23 Crore As Gift From Kalanithi Maran

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த கலாநிதி மாறன் (Photo Sun Pictures Twitter)

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisment

இந்தப் படம் இதுவரை கிட்டத்தட்ட ரூ.600 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்தக் காரின் மதிப்பு ரூ.1.23 கோடி ஆகும். இந்தக் கார் நமது நாட்டில் கிடைக்கும் கார்களில் மிகவும் சொகுசு வாய்ந்த கார்களுள் ஒன்றாக உள்ளது.

மேலும் இந்த ரக கார்களை யாமி கௌதம், ஷாகித் கபூர், அஜய் தேவ்கன், கரீனா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வைத்துள்ளனர்.

ரஜினிகாந்துக்கு பரிசாக வழங்கப்பட்ட கார் நீல நிறம் ஆகும். எனினும் இந்தக் கார் கார்பன் ப்ளாக், மினரல் வொயிட், டிராவித் க்ரே உள்ளிட்ட வண்ணங்களிலும் கிடைக்கிறது.

காரின் தோற்றத்தைப் பொறுத்தவரை, BMW X7 ஆனது X7 இன் டிஎன்ஏவில் பல நவீன வடிவமைப்பு குறிப்புகளை உள்ளடக்கியது. புதிய வடிவமைப்பு கூறுகள், ஸ்பிலிட்-எல்இடி ஹெட்லேம்ப் என நீள்கிறது.

கூடுதலாக, பம்பர் டைனமிக், வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது காரின் முன்பகுதியை வலுவான வளைவுகள் மற்றும் சாய்வுகளுடன் உள்ளடக்கியது.

நிறுவனம் புதிய அலாய் வீல்களை SUV கொண்டு செல்ல பயன்படுத்துகிறது. இது, அதன் தனித்துவத்தை மேம்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி நமது நாட்டில், BMW X7 இன் xDrive 40i மற்றும் xDrive 40d ஆகிய இரண்டு பதிப்புகளும் விற்பனையாகி வருகின்றன.

இரண்டு கார்களிலும் இன்லைன் ஆறு சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல் மோட்டார்கள் உள்ளன. 48V மைல்ட் ஹைப்ரிட்களுடன், இரண்டு இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவுடன் தரநிலைகளும் உள்ளன.

பெட்ரோல் எஞ்சினின் 381 ஹெச்பி மற்றும் 520 என்எம் உடன் ஒப்பிடும்போது, டீசல் எஞ்சின் 340 ஹெச்பி மற்றும் 700 என்எம் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் 10 வெவ்வேறு மொழிகளில் வெளியானது. இப்படத்தில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படத்தில் ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rajinikanth #Kalanithi Maran #Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment