Advertisment

ரஜினிகாந்துடன் இணையும் அழகர்...? ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்

சுப்பிரமணியபுரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜெய்யின் சினிமா வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் படமாகவும் அமைந்தது.

author-image
WebDesk
New Update
ரஜினிகாந்துடன் இணையும் அழகர்...? ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். சன்பிச்சர்ஸ் தயாரித்த இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது.

publive-image

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என்றும் சன்பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என்று அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே பீஸ்ட் படம் தோல்வியடைந்ததால், ரஜினி நெல்சன் படம் உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படையப்பா படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன், மலையாளத்தில் முக்கிய நடிகரான வினாயகன், ராக்கி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள இந்த படத்தில் தற்போது புதிதாக நடிகர் ஜெய் இணைந்துள்ளார்.

publive-image

பகவதி படத்தில் விஜயின் தம்பியாக அறிமுகமான நடிகர் ஜெய் சென்னை 28 படத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகரான வளர்ந்தார். தொடர்ந்து அவர் நடித்த சுப்பிரமணியபுரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜெய்யின் சினிமா வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் படமாகவும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு பெரிய வெற்றிப்படங்களை கொடுக்கவில்லை என்றாலும் ஜெய் வித்தியாசனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment