ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்ட எம்.ஜி.ஆரின் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத் தொடக்க விழா

அனிமேஷன் படமாக உருவாகும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை, அருள்மூர்த்தி இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, டி.இமான் இசையமைக்கிறார்.

எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த மிகப் பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972ஆம் ஆண்டிலேயே ஜப்பான், ஹாங்காங் உள்பட பல நாடுகளில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் இது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அதன்பிறகு அரசியலில் பிஸியாகிவிட்டதால், கடைசிவரை அவரால் அந்தப் படத்தை எடுக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் கனவை, அவரின் நண்பரான மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் நிறைவேற்ற இருக்கிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

அனிமேஷன் படமாக உருவாகும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை, அருள்மூர்த்தி இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, டி.இமான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் தொடக்க விழா, சத்யா ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

×Close
×Close