மறைந்த நடிகர் ரகுவரன் இசையமைத்துப் பாடிய ஆல்பத்தை வெளியிட்ட ரஜினிகாந்த்

மறைந்த நடிகர் ரகுவரன் இசையமைத்துப் பாடிய ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பை, ரஜினிகாந்த் வெளியிட்டார்.

மறைந்த நடிகர் ரகுவரன் இசையமைத்துப் பாடிய ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பை, ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் எனப் பலவிதமான மாறுபட்ட நடிப்பில் அசத்தியவர் ரகுவரன். குறிப்பாக, ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தில் வில்லனாக கெத்து காட்டியிருப்பார் ரகுவரன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி, ஹிந்தியிலும் நடித்துள்ளார் ரகுவரன்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ரகுவரன், கடந்த 2008ஆம் ஆண்டு மறைந்தார். அவரைப் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாத விஷயம், அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பது. தானே இசையமைத்து, பாடியும் இருக்கிறார் ரகுவரன். ஆங்கிலத்தில் அவர் இசையமைத்துப் பாடிய பாடல்களை, சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த ஆல்பத்தை ரஜினிகாந்த் வெளியிட, ரகுவரனின் மனைவியும், நடிகையுமான ரோகிணி மற்றும் மகன் ரிஷி இருவரும் பெற்றுக் கொண்டனர். இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழ க்ளிக் செய்யவும்.

×Close
×Close