/indian-express-tamil/media/media_files/2025/10/09/rajinikanth-nh-2025-10-09-19-43-19.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அவர் பயணித்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கூலி படத்தின் ரிலீஸ்க்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்த ரஜினிகாந்த் அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இதனிடையே ரஜினிகாந்த் தனது வழமையான வருடாந்திர ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அண்மையில், அவர் உத்தரகண்டில் உள்ள மஹாவதார் பாபாஜி குகைகளுக்கு வெளியே அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
சட்டைக்கு மேல் ஒரு ஜாக்கெட் மற்றும் வெள்ளை பேன்ட் அணிந்து, தொப்பி மற்றும் ஊன்றுகோலுடன் இருந்த ரஜினிகாந்த், ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களில் அமைதியாகவும் ஆழ்ந்த சிந்தனையுடனும் காணப்பட்டார். ரசிகர்களுடன் பொறுமையாகப் புகைப்படம் எடுத்துக்கொள்வதும், தங்களது விருப்பமான நட்சத்திரத்தை அருகில் கண்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பதும் போன்ற சில காணொளிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
மேலும், அதிகரித்து வரும் கூட்டத்திற்கு மத்தியில் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் உரையாடுவதையும், அந்தக் காணொளிகளில் காண முடிகிறது. இதற்கு முன்னர், ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் பல ஆசிரமங்களுக்குச் சென்றுள்ளார். ரஜினிகாந்தின் இந்த ஆண்டின் ஆன்மீகப் பயணம் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் தாம் ஆகிய இடங்களில் தொடங்கி, பின்னர் மஹாவதார் பாபாஜி குகைகளுக்கு சென்றுள்ளது.
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபட்ட நடிகர் ரஜினிகாந்த். 📸 #Himalayas | #BabajiCave | #Uttarakhand | #Rajinikanthpic.twitter.com/3pGuPQB8Db
— சினிமா விகடன் (@CinemaVikatan) October 9, 2025
முன்னதாக தனது ஆன்மீகப் பயணங்களைப் பற்றி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரஜினிகாந்த், , "ஒவ்வொரு வருடமும் நான் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவேன். அதுவே எனது ஆன்மீகப் பயணத்தை மீண்டும் மீண்டும் தொடரச் செய்கிறது. முழு உலகிற்கும் ஆன்மீகம் தேவை; அது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது. ஆன்மீகமாக இருப்பது என்றால் அமைதியையும் சாந்தத்தையும் அனுபவிப்பது என்று பொருள், மேலும் அடிப்படையாக, அது கடவுள் நம்பிக்கையை உள்ளடக்கியது" என்று கூறியிருந்தார்.
Thalaivar in Himalayas ❤️❤️❤️#Coolie#Thalaivar#SuperstarRajinikanth#Rajinikanth#25YearsOfThalaivarFansUSA#jailer2pic.twitter.com/nlCMmIWkBZ
— Rajini Vasu USA (@gvdev2000) October 9, 2025
இமயமலையில் இருந்து திரும்பியதும், ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கவுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்சாரமூட், சிவராஜ் குமார், மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். அதன்பிறகு, கமல்ஹாசனுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் தனது அடுத்த படத்தையும் உறுதி செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us