Advertisment

ரஜினிகாந்தின் 'தலைவர் 164' பட டைட்டில் வெளியீடு!!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினிகாந்தின் 'தலைவர் 164' பட டைட்டில் வெளியீடு!!

'கபாலி' படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்க 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை 'தலைவர் 164' என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'கரிகாலன்' எனும் அடைமொழியோடு இந்த டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். 'ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இதன் கதைக்களம் இருக்கும்' என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, மும்பை தாராவி பகுதி போன்று சென்னையில் செட் அமைத்து, வருகின்ற 28ஆம் தேதி ஷூட்டிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், படத்தின் இயக்குநர் ரஞ்சித்,  செட் அமைத்து படப்பிடிப்பு அமைப்பதை விட, நேரடியாக மும்பை தாராவி பகுதியிலேயே படப்பிடிப்பு  நடந்தால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். அதனால், மே 28ஆம் தேதி மும்பையில் தொடங்கும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டைட்டில் அறிவித்த சில மணி நிமிடங்களிலேயே ட்விட்டர் டிரெண்டிங்கில் 'காலா' முதலிடம் பிடித்துள்ளது.

Kaala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment