உல்லால்லா வைரல் ஹிட் : இதில் ரஜினியின் டிபிகல் பஞ்ச் என்ன தெரியுமா?

Petta Song Ullaallaa: ரஜினி மௌத் ஆர்கன் உபயோகப்படுத்தியது கடைசியா எப்போன்னு ஞாபகம் இருக்கா?

Rajinikanth Petta Song Ullaallaa, பேட்ட, மரண மாஸ், உல்லாலா
Rajinikanth Petta Song Ullaallaa, பேட்ட, மரண மாஸ், உல்லாலா

ULLAALLAA  LYRIC  VIDEO :   ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது பாடல் ‘உல்லால்லா’ நேற்று வெளியானது.

பேட்ட படத்தின் முதல் பாடல் ‘மெகா மாஸ்’ ஹிட் ஆனது. Youtube #ட்ரெண்டிங் லிஸ்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்தின் இரண்டாவது பாடலின் lyrical விடியோவை நேற்று வெளியிட்டார். இந்த பாடலை பாடியவர்கள் நகாஷ் ஆசிஷ் மற்றும் இன்னொ கெங்கா. இது ஒரு ‘Baila’ வகை பாடலாக இருக்கும் என்று பாடலை வெளியிடுவதற்கு முன்பே அனிருத் வீடியோவில் கூறி இருந்தார். ‘Baila’ என்பது இலங்கையை சேர்ந்த ஒரு வகை இசை ஆகும். இது பொதுவாக விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் இசைப்பது வழக்கம்.

‘உல்லால்லா’ பாடல் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்பொழுது வரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் அந்த பாடலை Youtube தளத்தில் பார்த்து உள்ளனர். சரி, பாடல் எப்படி இருக்கு?

சாக்ஸபோன் இசையுடன் தொடங்கி, கிடார் வழியில் உள்ளே நுழைந்து நம்மை ஈர்க்கிறது பாடல். “எத்தனை சந்தோஷம் தினமும் கொடுத்து உம்மெல…” என்று ஆரம்பிக்கிறது பாடல். ரஜினியின் பாடல் என்றால் கருத்து இருக்க வேண்டும், இல்லை ஜாலியான டான்ஸ் நம்பராக இருக்க வேண்டும்; இதனை உணர்ந்த பாடலாசிரியர் விவேக், அனிருத் ஆகியோர் இரண்டுமே கலந்து கொடுத்து இருக்கிறார்கள். ரஜினியின் சிரிப்பு அலையை நாம் ஆங்காங்கே இந்த பாடலில் கேட்க முடியும்.

“ரிபர ரிப்பாரே…. என்று நடுவில் கரிபியன் Flavour இசையையும் தூவி அமர்களப்படுத்தி இருக்கிறார் அனிருத். “நீ சிந்துர கண்ணீரும் இங்கே நிரந்தரமில்ல, இதைப் புரிஞ்சிக்கிட்டாலே இங்கே நீதாண்டா ஆள…” இது டிபிக்கல் ரஜினி பன்ச்!

தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடல் வைப்ரேஷனை இந்த பாடல் தருகிறது,
90 -களில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை மீண்டும் நம் கண்முன்னே கொன்டுவந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

ஆக மொத்தத்தில் ‘பேட்ட’ படத்தில் தற்பொழுது வரை வெளியாகி இருக்கும் இரண்டு பாடல்களிலும் இசையமைப்பாளர் அனிருத் ‘அவுட் ஆப் தி பார்க்’  சிக்ஸர் அடித்திருக்கிறார்!

கொசுறு : ரஜினி மௌத் ஆர்கன் உபயோகப்படுத்தியது கடைசியா எப்போன்னு ஞாபகம் இருக்கா? படையப்பா படத்தில் தான் தலைவர் ஸ்டைல்லாக அதை பயன்படுத்தினார்… இப்போ திரும்பி பேட்ட படத்தில் அதை நாம் இந்த பாடல் மூலம் பாக்க முடியும்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth petta ullaallaa lyrical video

Next Story
நேற்று மாமனாரின் உல்லால்லா; இன்று மருமகனின் மாரி கெத்து… சபாஷ் சரியான போட்டிMaari Gethu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express