ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது பில்கிரிம் கிராமம். இங்கு, புகழ்பெற்ற மந்த்ராயலம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள ராகவேந்திரர் சன்னிதிக்குச் சென்று இன்று வழிபாடு செய்துள்ளார் ரஜினிகாந்த்.
வெள்ளை வேட்டி, சட்டையில் கோயிலுக்குச் சென்ற ரஜினிகாந்த், ராகவேந்திரரைத் தரிசிக்கும்போது சட்டையைக் கழற்றிவிட்டு மேலாடை இல்லாமல் வழிபட்டிருக்கிறார். அத்துடன், அங்குள்ள குருக்களிடமும் அமர்ந்து பேசியுள்ளார். ரஜினியின் கழுத்தில், அவர் வழக்கமாக அணிந்திருக்கக் கூடிய ருத்ராட்சை மாலை உள்ளது. வலது கையில் காப்பும், இடது கை மணிக்கட்டில் கறுப்பு நிற ஸ்ட்ரப் கொண்ட வாட்ச்சும் அணிந்துள்ளார்.
இமயமலையில் உள்ள பாபாவைத் தரிசிப்பதற்காக வரும் பக்தர்கள் இளைப்பாற, அங்கு ஒரு தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர் ரஜினியும், அவருடைய ஆன்மீக நண்பர்களும். ‘ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த மண்டபத்தின் கிரஹப் பிரவேசம், கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ ஜனவரி மாதம் 25ஆம் தேதியும், ‘காலா’ ஏப்ரல் மாதமும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.