Advertisment

ரஜினியின் ‘காலா’ டப்பிங் இன்று தொடங்கியது

சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டுடியோவில் இன்று டப்பிங் தொடங்கியுள்ளது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaala dubbing

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் இன்று தொடங்கியுள்ளது.

Advertisment

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால், சுகன்யா, சம்பத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ‘காலா’ படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்றது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘2.0’, ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய ‘2.0’, கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் தள்ளிப் போகிறது. எனவே, ‘காலா’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டுடியோவில் இன்று டப்பிங் தொடங்கியுள்ளது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ரஜினி வருகிற 31ஆம் தேதிவரை தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருப்பதால், அதன்பிறகு டப்பிங்கில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Cinema Pa Ranjith Kaala Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment