Advertisment

ஆடியோ ரிலீஸ் தேதி அறிவித்த பேட்ட... அஜித்தின் மௌனம் ரஜினியிடம் ஒர்க் அவுட் ஆகுமா?

விஸ்வாசம் படமும் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு மோதும் என்று தெரிவித்துவிட்டு, இப்படி ஒட்டுமொத்த படக்குழுவே மௌனம் சாதித்தால் என்ன செய்வது?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆடியோ ரிலீஸ் தேதி அறிவித்த பேட்ட... அஜித்தின் மௌனம் ரஜினியிடம் ஒர்க் அவுட் ஆகுமா?

ஆடியோ ரிலீஸ் தேதி அறிவித்த பேட்ட... அஜித்தின் மௌனம் ரஜினியிடம் ஒர்க் அவுட் ஆகுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் ஆடியோ வரும் டிசம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதேசமயம், பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவினர் சத்தம் போடாமல் இருப்பது, அஜித் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.

Advertisment

நம்ம தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி இருக்கே... அது ஒரு அலாவுதீன் விலக்கு மாதிரி. தேய்க்க தேய்க்க பூதம் வரும். அது போல் வாரா வாரம் சினிமா எனும் பூதம் வரும். ஆனால், வெளியில் வரும் பூதம் கடிக்குமா? அல்லது வாழ வைக்குமா? என்பது அந்த பூதம் வெளிவந்த பிறகு தான் தெரியும்.

ஒரு பூதம் வெளியானாலே ரிசல்ட் என்னவாகும்-னு தலையை பிய்ச்சிக்க வேண்டியதா இருக்கும். இதுல ரெண்டும் ஒரே நேரத்துல கிளம்பி வருதுன்னு அறிவிச்சாங்க... அதில் ஒண்ணு, ரஜினி மாதிரியே ஸ்பீடா இருக்கு... இன்னொன்னு அஜித் மாதிரியே மௌனமா இருக்கு.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே நடித்துத் தள்ளியுள்ள படம் பேட்ட. இப்படம் பொங்கலுக்கு வரும் என்று சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்தது. அதை நோக்கிய பயணமாக, பேட்ட படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 3ம் தேதியும், செகண்ட் சிங்கிள் 7ம் தேதியும் வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அனைத்துப் பாடல்களும் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 29ம் தேதி ரஜினியின் 2.O ரிலீசாக உள்ள நிலையில், பேட்ட படத்தின் பாடல்களும் அடுத்த பத்தே நாளில் வெளியாக இருப்பதால், அடுத்த ஒரு மாதத்திற்கு ரஜினி ஜுரம் மட்டுமே கோலிவுட்டில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், 'தல' அஜித்தின் விஸ்வாசம் படமும், பொங்கலுக்கு தான் ரிலீசாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபில்ம்ஸ் அதிகாரப்பூர்வமாக முன்னரே அறிவித்து இருந்தது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தேர்ட் லுக் என்று வரிசையாக அஜித்தின் லுக்குகளை படக்குழு வெளியிட்டதே தவிர, பொங்கலுக்கு ரிலீஸாவதற்கான வேறெந்த நடவடிக்கையும் இருப்பதாக தெரியவில்லை.

அப்படியே பொங்கலுக்கு ரிலீசாகும் என்று வைத்துக் கொண்டாலும், நமக்கு சில கேள்விகள் எழாமல் இல்லை. இது 'தல' படம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அஜித் என்ற பெயருக்கு தான் ரசிக மழை பொழியும். ஆனால், படத்தின் நாயகன் அஜித், நாயகி நயன்தாரா என இருவருமே தங்கள் பட புரமோஷனுக்கு செல்ல மாட்டார்கள். நயன்தாராவை கூட, விக்னேஷ் சிவனை வைத்து கரெக்ட் செய்துவிடலாம் என வைத்துக் கொண்டாலும், அஜித் 'தல'யை வெளிக்காட்டவே மாட்டார். ஒன்லி ஆன் ஸ்க்ரீனில் தான் அவரை பார்க்க முடியும்.

அப்படி இருக்கும் போது, எங்கள் படமும் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு மோதும் என்று தெரிவித்துவிட்டு, இப்படி ஒட்டுமொத்த படக்குழுவே மௌனம் சாதித்தால் என்ன செய்வது?.

அடுத்த மாதம் முழுவதும் 2.O படம ரிவியூஸ், இன்டர்வியூஸ், பேட்ட ஆடியோ, ஆடியோ ரிவியூ என்று முழுக்க முழுக்க ரஜினியின் டாக் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், விஸ்வாசம் படக்குழு இப்படி மௌனமாகவே இருந்தால், பாதிக்கப்படப் போவது விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளரும் தான்.

நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதில், நிறைய ஸ்க்ரீன்கள் கிடைக்க வேண்டும். பேட்ட வெளியானால், முக்கால்வாசி தியேட்டர்கள் ரஜினி படத்திற்கு சென்றுவிடும். அப்படியே, பாதிக்குப் பாதி உங்களுக்கு தியேட்டர்கள் கிடைத்தாலும், நீங்க முதலீடு செய்த பணத்திற்கு ஏற்ப வசூல் கிடைக்குமா? படமே நன்றாக இருந்து சூப்பர் ஹிட் ஆனாலும் கூட, பாதி தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்தால், போட்ட பணத்தை எப்படி திருப்பி எடுக்க முடியும்?

இதே கேள்வி தான் ரஜினியின் பேட்ட டீமுக்கும். ஆனாலும் அவர்கள் இந்த வருடம் தான் படத்தை தொடங்கினார்கள், இந்த வருடமே முடித்தும் விட்டு, பாடல் வெளியீட்டிற்கு வந்துவிட்டீர்கள். அவர்கள் ரிலீஸுக்கு தயார்.

இந்த நேரத்தில் விஸ்வாசம் வெளியானால், நிச்சயம் இரு படத்திற்கும் பாதிப்பு என்பதை மறுக்கவே முடியாது.

நீங்க மௌனமாக இருப்பது மற்ற நடிகர்கள் கிட்ட ஒர்க் அவுட் ஆகும் மிஸ்டர் அஜித். பட், இப்போ உங்க எதிர்ல நிக்குறது ரஜினி என்பதை மறந்துவிட வேண்டாம். இதை அஜித்தும் புரிந்து கொள்ள வேண்டும், படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய தயாரிப்பு நிறுவனமும் புரிந்து கொள்ள வேண்டும்.

Rajinikanth Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment