scorecardresearch

ரஜினியுடன் மோதுகிறாரா ஜி.வி.பிரகாஷ்?

ரஜினியின் ‘2.0’, ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதாக இருந்தால், ரஜினியுடன் ஜி.வி.பிரகாஷ் மோதுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Rajinikanth, Kaala, Court refused to ban
Rajinikanth, Kaala, Court refused to ban

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படமும், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘100% காதல்’ படமும் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி கிராபிக்ஸ் பணிகள் முடியாததால், ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘100% காதல்’ படமும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எம்.சந்திரமெளலி இயக்கிவரும் இந்தப் படத்தில், ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது.

இந்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு லண்டனிலும், 10 சதவீத படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெறுகிறது. நாசர், ஜெயசித்ரா, லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகிபாபு, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த இரண்டு படங்களுமே ஏப்ரலில் தான் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, தேதி அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதாக இருந்தால், ரஜினியுடன் ஜி.வி.பிரகாஷ் மோதுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinis 2 0 clash with g v prakashs 100 kadhal