scorecardresearch

அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்

அகிவ் அலி இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.

Rakul Preet singh

அஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.

டெல்லியைச் சேர்ந்த ரகுல் ப்ரீத்சிங், ‘கில்லி’ என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த ஒரு படம்தான் அவர் கன்னடத்தில் நடித்தது. அதன்பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த ரகுல் ப்ரீத்சிங்கிற்கு, தமிழில் அவ்வளவாக வரவேற்போ, வாய்ப்புகளோ பிடிக்கவில்லை.

எனவே, தெலுங்கில் தீவிர கவனம் செலுத்திய ரகுல் ப்ரீத்சிங், தற்போது அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் எப்படியாவது மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரகுல் ப்ரீத்சிங், ‘ஸ்பைடர்’ மூலம் ரீஎன்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் தோல்வியைத் தழுவியது.

இருந்தாலும், கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இதனால், ரகுலுக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.

இந்நிலையில், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, அகிவ் அலி இயக்குகிறார். தபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பூஷண் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘யாரியன்’ படத்தின் மூலம் ரகுல் ப்ரீத்சிங்கை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் பூஷண் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் பாண்டே இயக்கத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்த ‘அய்யாரி’ ஹிந்திப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rakul preet singh pair with ajay devgn