மீண்டும் மீண்டுமா? இந்த முறை வம்பிழுத்த 'என்னமா' ராமர்; ஷாக் ஆனா மாதம்பட்டியார்!

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்க்கும் விதமாக விஜய் டிவி ராமர் பேசியுள்ளார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஆச்சரியத்துடன் சிரித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்க்கும் விதமாக விஜய் டிவி ராமர் பேசியுள்ளார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஆச்சரியத்துடன் சிரித்த வீடியோ வெளியாகியுள்ளது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
ramar

சமீபத்தில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் சமைக்கும் அதே வேளையில், கோமாளிகள் செய்யும் சேட்டைகளும், காமெடிப் பேச்சுகளும் ரசிகர்களைச் சிரிக்க வைக்கின்றன. இந்நிலையில் சம்பவத்தில், கோமாளி ராமர் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்துப் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இண்ட வீடியோவும் மீனா என்பவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

வழக்கமாக ராமர் பெண் வேடமிட்டு, 'சொல்வதெல்லாம் பொய்' என்ற நிகழ்ச்சி போல ஒரு செட் அமைத்து காமெடி செய்வார். இந்த முறை, அவர் சுனிதாவிடம் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தார். சுனிதாவின் காதல், திருமணம் பற்றிப் பேசியபோது, "உனக்கு இரண்டு கணவர்களும் வேண்டாம். மாதம்பட்டி ரங்கராஜ் என்ற ஒருவர் இருக்கிறார்" என்று கேலியாகக் கூறினார்.

அப்போது மாதம்பட்டி ரங்கராஜ், "என்னம்மா ராமர்!" என்று அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கூறினார். இந்தச் சம்பவம் நிகழ்ச்சியில் காமெடியாகக் காட்டப்பட்டாலும், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் குறித்து ராமர் அவரை வம்பிழுக்கும் விதமாக அமைந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஜாய் கிரிசில்டாவுடனான விவாகரத்து விவகாரத்தில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த இந்தச் சம்பவம், ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் வேண்டுமென்றே மாதம்பட்டி ரங்கராஜைக் கலாய்க்கிறாரா அல்லது அது ஒரு தற்செயலான காமெடி மட்டும்தானா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.  மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது  ஜாய் கிரிசில்டாவின் பிரச்சனையில் சிக்கியுள்ள நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவி ராமர் பெண் வேடமிட்டு அவரை கலாய்த்து உள்ளார்.

Advertisment
Advertisements

அதில் சொல்வதெல்லாம் பொய் என்று ஒரு நிகழ்ச்சி மாதிரி செட் செய்துவிட்டு பின்னர் சுனிதாவிடம் விளையாட்டாக உனக்கு இரண்டு கணவர்களும் வேண்டாம் மாதம்பட்டி ரங்கராஜ் என்று ஒருவர் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் என்னம்மா ராமர்  என்று திடுக்கிட்டு ஆச்சரியத்துடன் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி காமெடியாக இருந்தாலும் மாதம்பட்டியின் இரண்டாவது திருமணம் குறித்து கலாய்த்த விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Madhampatty Rangaraj Ramar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: