/indian-express-tamil/media/media_files/2025/10/05/rashmika-vijay-dev-2025-10-05-12-12-34.jpg)
கடந்த சில ஆண்டுகளாக நீடித்த யூகங்கள் மற்றும் காதல் வதந்திகளுக்குப் பிறகு, நடிகர்கள் ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி தற்போது அதிகாரப்பூர்வமாகத் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம், நடைபெற உள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
36 வயதான விஜய் தேவரகொண்டா, 29 வயதான ரஷ்மிகாவை, அவர்கள் இணைந்து நடித்த வெற்றி பெற்ற தெலுங்குப் படமான 'கீதா கோவிந்தம்' படப்பிடிப்புத் தளத்தில் தான் முதன்முதலில் சந்தித்தார். அந்த நேரத்தில், ரஷ்மிகாவுக்குக் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. ஆனால் இந்த நிச்சயதார்த்தம் ஓராண்டுக்குள் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்மிகா ரக்ஷித்தை ஏமாற்றிவிட்டார் என்று கருதிய ரசிகர்கள் மத்தியில், பெரும் சர்ச்சை மற்றும் கடுமையான ட்ரோல் செய்ய தொடங்கினர்.
ரஷ்மிகா மந்தனாவின் புகழ் அறிமுகம்
ரஷ்மிகா மந்தனாவின் பயணம், பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல் மற்றும் வர்த்தகக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 'க்ளீன் & க்ளியர் ஃப்ரெஷ் ஃபேஸ்' போட்டியில் வென்றதன் மூலம் தொடங்கியது. இந்த ஆரம்ப அங்கீகாரம், ஒரு குறுகிய கால மாடலிங் தொழிலுக்கு வழிவகுத்தது. இக்காலத்தில், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர், இறுதியில் திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்தார்.
🌝❤#RashmikaMandanna#Pushpa2TheRulepic.twitter.com/3zfgJviViF
— S R E E | ಶ್ರೀ ✨ (@SreeDharaNEL) October 3, 2024
அவர், 'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கிய 'கிரிக் பார்ட்டி' (2016) படத்திற்கு ஆடிஷன் செய்தார். அப்போதே பிரபலமான கன்னட நடிகர்-இயக்குனர் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்தார். ரக்ஷித் ஷெட்டி அவரை விட 13 வயது மூத்தவர். ஆனால் படப்பிடிப்பின் போது, இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். பின்னர், 2017 ஆம் ஆண்டில் ஒரு பிரம்மாண்டமான விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அந்த வீடியோக்கள் இன்றும் யூடியூபில் இருக்கிறது. அந்த நேரத்தில், ரஷ்மிகாவுக்குச் சினிமாவில் நீண்ட கால வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இருக்கவில்லை.
இருப்பினும், 'கிரிக் பார்ட்டியில் அவரது நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற பிறகு, நிலைமை மாறத் தொடங்கியது. ரஷ்மிகா பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த தெலுங்குத் 'பிளாக்பஸ்டர்' படமான 'கீதா கோவிந்தம்' படமும் அடங்கும். ஆனால் ரஷ்மிகா தொடர்ந்து நடிப்பதில், ரக்ஷித் ஷெட்டியின் குடும்பத்திற்கு அசௌகரியம் இருந்ததாகவும், இது இரு குடும்பங்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுத்தது என்றும் செய்திகள் தெரிவித்தன.
இறுதியில், தங்கள் நீண்ட கால லட்சியங்களும், எதிர்காலத்திற்கான பார்வையும் ஒத்துப் போகவில்லை என்பதை அத்தம்பதியினர் உணர்ந்தனர். 'கீதா கோவிந்தம்' திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 2018 இல், அவர்கள் தங்கள் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டனர்.
ரஷ்மிகாவைத் துரத்திய சர்ச்சைகள்
ரஷ்மிகா அல்லது ரக்ஷித் ஷெட்டி ஆகிய இருவருமே இந்த நிச்சய முறிவைப் பற்றிப் பொதுவெளியில் பேசாத போதிலும், இந்தக் கன்னடத் திரையுலக ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த ரொமாண்டிக் காட்சிகளுக்காக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். பலர் அவர் விசுவாசமற்றவர் என்றும், தன் கன்னட வேர்களை மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
அதன்பிறகு, ரஷ்மிகா படிப்படியாகத் தெலுங்குத் திரையுலகிற்குத் தனது கவனத்தை மாற்றினார். சர்ச்சைகள் வெடிப்பதற்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 'பொகரு' என்ற கன்னடப் படமே அவர் கடைசியாக நடித்த கன்னடப் படமாகும். 2022 ஆம் ஆண்டளவில், அவரை அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனத்தை அவர் அங்கீகரிக்கத் தவறியதற்காக, அவர் கன்னடத் திரையுலகில் இருந்து கிட்டத்தட்டத் தடை செய்யப்படும் நிலை வரை பதட்டங்கள் உச்சத்தை எட்டின. பல விமர்சகர்கள் அவர் நன்றி கெட்டவர் என்றும், கன்னட மொழியை அவமதிப்பவர் என்றும் குற்றம் சாட்டினர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/05/rashmika-2025-10-05-12-21-41.webp)
மேலும், ரஷ்மிகா தன்னை அறிமுகப்படுத்திய ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அவர் ஒரு நேர்காணலில் சொன்னபோது, அவருக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்தன. இந்த ட்ரோல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்மிகா 2022 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான குறிப்பைப் பதிவிட்டு, அதை நீக்கினார்:
கடந்த சில நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, ஒருவேளை பல ஆண்டுகளாகவே, சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்து வருகின்றன, அதை நான் இப்போது பேச வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்தே, நான் நிறைய வெறுப்புகளைச் சந்தித்து வருகிறேன். வெளி உலகுக்கு நான் ஒரு குத்துச் சண்டை மூட்டைப் போலவும், ட்ரோல்களுக்கு இலக்காகவும் இருக்கிறேன்.
உங்களை எல்லாம் மகிழ்விக்க நான் எந்த மாதிரியான உழைப்பைச் செலுத்துகிறேன் என்று எனக்கு மட்டுமே தெரியும். நான் வெளியிடும் திரைப்படங்களில் நீங்கள் பெறும் மகிழ்ச்சியே எனக்கு மிகவும் முக்கியமானது. இணையத்தில் நான் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும்போது, குறிப்பாக நான் சொல்லாத விஷயங்களுக்காக ட்ரோல் செய்யப்படும்போது அது மனதை உடைக்கிறது, மேலும், வெளிப்படையாகச் சொல்லப் போனால், ஊக்கத்தை இழக்கச் செய்கிறது என்று கூறியிருந்தார்.
இணையம் முழுவதும் பரவும் தவறான கதைகள் எனக்கும், திரையுலகிலும் வெளியிலும் நான் வைத்திருக்கும் உறவுகளுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆக்கபூர்வமான விமர்சனத்தை நான் வரவேற்கிறேன், ஏனென்றால் அதுவே என்னை மேம்படுத்தத் தூண்டுகிறது. ஆனால், இந்தக் கொடிய எதிர்மறைத்தன்மையும் வெறுப்பும் எதற்காக? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
பல வருட இணையத் தாக்குதலுக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டாவிடம் ரஷ்மிகா காதலைக் கண்டார். இந்தக் கடினமான கால கட்டத்திலும், ரஷ்மிகா தனது உறவில் விஜய் தேவரகொண்டாவிடம் மகிழ்ச்சியைக் கண்டதாகத் தெரிகிறது. 2023 ஆம் ஆண்டு 'காஸ்மோபாலிட்டன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் தனது உறவு பற்றி சூசகமாகத் தெரிவித்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/05/snapinsta-2025-10-05-12-21-41.webp)
என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு என் துணை தேவை. அந்த ஆறுதலும், பாதுகாப்பும், பச்சாதாபமும் எனக்குத் தேவை. ஒரு உறவில் எனக்கு மிக முக்கியமான விஷயம் நிச்சயமாக கருணைதான், அதே சமயம் மரியாதையும் தான். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக மதித்து, உண்மையாக அக்கறை கொண்டு, பொறுப்பாக இருக்கும்போது அது அத்தனையும் சேர்கிறது என்று கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஒரு விளம்பர நிகழ்வில், தனது துணை திரைப்படத் துறையைச் சேர்ந்தவரா என்று கேட்கப்பட்டபோது, ரஷ்மிகா சாமர்த்தியமாகப் பதிலளித்தார்: "இந்த விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் இந்த பதில்களை நீங்கள் என் வாயிலிருந்து கேட்க விரும்புகிறீர்கள், அவ்வளவுதான்" என்று கூறினார். தற்போது, அவர்களது நிச்சயதார்த்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பிப்ரவரி 2026 இல் திருமணம் செய்துகொள்ளத் தயாராக உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.