ஹாஸ்டல் அறை முழுவதும் போட்டோ கட்டிங், தியேட்டரில் கட்டவுட் திருடிய சினிமா பிரபலம்: ஸ்ரீதேவி தீவிர ரசிகர் செய்த வேலை!

ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக நீடித்தது, குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக நீடித்தது, குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

author-image
D. Elayaraja
New Update
Sridevi Mom Movie

நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும், இந்திய சினிமாவில் அவரது ஆதிக்கம் இன்னும் பசுமையாகவே உள்ளது. அவரை பற்றி பிரபலங்கள் பலரும் தங்கள் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு ஒளிப்பதிவாளர் நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக நீடித்தது, குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். எந்தவொரு கேரக்டராக இருந்தாலும், அதை உணர்வுபூர்வமானதாக திரையில் கொண்டுவரும் அவரது நடிப்பு இன்றும் பார்வையாளர்களிடமும், திரையுலகின் உச்ச நட்சத்திரங்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் அவரது ரசிகர்களாக உளள்னர்.

அந்த வகையில், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ரவி. கே. சந்திரன் அவர்களும் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர் ஆவார். ஸ்ரீதேவி மீது அவருக்கு இருந்த அபிமானம் எந்த அளவுக்கு என்றால், அவர் கல்லூரி விடுதியில் இருந்தபோது, செய்தித்தாள்கள், சினிமா இதழ்கள் மற்றும் சினிமா போஸ்டர்களில் இருந்து அவரது படங்களை வெட்டி தனது அறைச் சுவர்களில் ஒட்டியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸின் 'ஸ்கிரீன்' (Screen) இதழுக்கு அளித்த பேட்டியில், ரவி. கே. சந்திரன் ஸ்ரீதேவி மீதான தனது அபிமானம் பகிர்ந்துள்ளார். மேலும், தனது "ஸ்ரீதேவி அறை" பற்றி அவரிடம் கூறியபோது ஸ்ரீதேவியின் எதிர்வினை குறித்தும் அவர் விவரித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரவி. கே. சந்திரன், "நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு திரையரங்கில் இருந்து ஸ்ரீதேவியின் ஒரு முழு உருவ கட்-அவுட்டைத் திருடி வந்து என் அறையில் வைத்தேன். என் அறை 'ஸ்ரீதேவி அறை' ஆனது. சுவர்கள் முழுவதும் அவரது புகைப்படங்களால் நிரம்பி வழிந்தன. செய்தித்தாளில் அவரது படம் வரும்போதெல்லாம், அதை வெட்டி சுவரில் ஒட்டிவிடுவேன். மக்கள் என் அறைக்கு வந்து அவரது புகைப்படங்களைப் பார்ப்பார்கள் அல்லது கேலியாகக் கும்பிடுவார்கள்.

Advertisment
Advertisements

Ravi K Chandran

பாலிவுட்டில் பிரபலமடைந்த பிறகும், தனது அபிமான நடிகையைச் சந்திக்க ரவிக்கு நீண்ட நாட்களாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பம் அவரது விருப்பத்தை நிறைவேற்றியது. இந்த வாய்ப்பு அவருக்கு ஸ்ரீதேவியின் மைத்துனரும், நடிகருமான அனில் கபூர் மூலம் கிடைத்தது.
அந்தத் தருணத்தை நினைவுகூர்ந்த், ரவி. கே. சந்திரன், "ஒருநாள், நான் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியைப் பார்க்கச் சென்று கதை கேட்டேன். பிறகு அவர், 'நாம நைட் ஷோ 'தி ஹேங்ஓவர்' படம் பார்க்கலாம்' என்று சொல்ல, நானும் ஒத்துக்கொண்டேன். அவர் அருகில் வசிக்கும் அனில் கபூரையும் அழைத்தார்.

அனில் கபூர் டிரைவர் வரவில்லை என்பதால், அவர் என் காரிலேயே எங்களுடன் வந்தார். அப்போது அனில், 'ஸ்ரீயையும் கூப்பிடுகிறேன்' என்றார். அவர் யாரைச் சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் என் டிரைவரிடம் வழியைக் கூறி, நாங்கள் அங்கே சென்றபோது, ஸ்ரீதேவியே வந்து காரில் உட்கார்ந்தார்.  எனக்கு நடுவில் இருக்கை கிடைத்தது; ஒருபக்கம் அனில், மறுபக்கம் ஸ்ரீதேவி. அந்த நொடி என் இதயம் நின்றுவிட்டது. என் திரைக் கனவு நாயகி என் பக்கத்தில் இருந்தார். நான் பேச முடியாமல் திகைத்துப் போனேன். அவர் தியேட்டரிலும் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார்.

நான் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். பிறகு நான் அவரிடம், 'மேடம், நான் ஒருமுறை உங்கள் கட்-அவுட்டைத் திருடி என் ஹாஸ்டல் ரூமில் வைத்தேன் தெரியுமா? இந்த தருணம் நிஜம் என்று என்னால் நம்ப முடியவில்லை' என்று சொன்னேன். அதற்கு அவர், 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சார்? நான் உங்கள் படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன்' என்று பதிலளித்தார். உடனே நான், 'தயவுசெய்து என்னை 'சார்' என்று அழைக்காதீர்கள். நான் உங்கள் தீவிர ரசிகன், இந்த நிமிடம் எனக்கு நம்ப முடியாதது' என்று சொன்னேன். அது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகும்," என்று குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, ரவியால் தன் அபிமான நடிகையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்ரீதேவி தனது 54-வது வயதில், பிப்ரவரி 24, 2018 அன்று துபாயில் நடந்த ஒரு விபத்தில் காலமானார். அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி, குஷி கபூர் ஆகியோர் இன்றும் அவரது நினைவுகளைப் போற்றி வருகின்றனர்.

tamil cinema actress Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: